உணவுப் பணவீக்கம் அதிகமுள்ள முதல் 10 நாடுகளில் இலங்கையும்...

Published By: Digital Desk 2

27 Dec, 2022 | 12:16 PM
image

(எம்.மனோசித்ரா)

உலக வங்கியின் அண்மைய தரப்படுத்தலுக்கமைய அதிக உணவு பணவீக்கம் கொண்ட முதல் 10 நாடுகளில் இலங்கை 7ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. அதற்கமைய இலங்கையில் உணவு பணவீக்கம் 74 சதவீதமாகக் காணப்படுவதாக உலக வங்கி குறிப்பிட்டுள்ளது.

உணவு பணவீக்கம் அதிகமுள்ள நாடுகளில் சிம்பாபே முதலாவது இடத்திலுள்ளது. இந்நாட்டில் உணவு பணவீக்கம் 321 சதவீதமாகக் காணப்படுகிறது. லெபனான் இந்த பட்டியலில் இரண்டாம் இடத்திலுள்ளது. இந்நாட்டில் உணவு பணவீக்கம் 203 சதவீதமாகக் காணப்படுகிறது.

இதே போன்று வெனிசுலா மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது. இந்நாட்டில் உணவு பணவீக்கம் 158 சதவீதமாகக் காணப்படுகிறது.

நான்காவது இடத்தில் துருக்கி காணப்படுகிறது. அங்கு உணவு பணவீக்கம் 102 சதவீதமாகக் காணப்படுகிறது. ஐந்தாம் இடத்தில் ஆஜென்டீனா காணப்படுகிறது. அங்கு உணவு பணவீக்கம் 92 சதவீதமாகக் காணப்படுகிறது.

இதேவேளை, ஆறாவது இடத்தில் ஈரான் காணப்படுகிறது. ஈரானில் உணவு பணவீக்கம் 84 சதவீமாகக் காணப்படுகிறது. 7ஆவது இடத்தில் இலங்கையும் , எட்டாவது இடத்தில் ருவாண்டாவும் காணப்படுகின்றன. ருவாண்டாவில் உணவு பணவீக்கம் 65 சதவீதமாகக் காணப்படுகின்றது.

ஒன்பதாவது இடத்தில் சுரினாம் (தென் அமெரிக்க நாடு) காணப்படுகிறது. அந்த நாட்டில் உணவு பணவீக்கம் 51 சதவீதமாகக் காணப்படுகிறது. ஹங்கேரி நாடு 44 சதவீத உணவு பணவீக்கத்துடன் 10ஆவது இடத்தில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் போதைப்பொருளுடன் கைது

2025-04-24 12:12:05
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-04-24 11:58:49
news-image

பாடசாலையில் விளையாட்டு பயிற்சியில் பங்கு பற்றாத...

2025-04-24 11:50:43
news-image

‘ஸ்ரீ தலதா வழிபாடு’: கண்டிக்கு வருகை...

2025-04-24 12:00:22
news-image

மன்னாரில் இந்திய அரசின் அபிவிருத்தித் திட்டங்கள்...

2025-04-24 12:01:52
news-image

உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின்...

2025-04-24 11:33:03
news-image

டயானா கமகேவுக்கு எதிரான வழக்கு மீதான...

2025-04-24 11:29:31
news-image

பூஸா சிறைச்சாலையில் விசேட சோதனை ;...

2025-04-24 10:53:50
news-image

மினுவங்கொடை துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு...

2025-04-24 11:44:09
news-image

இலங்கையர்களுக்கு இந்திய அரசின் ஆயுஷ் புலமைப்பரிசில்

2025-04-24 11:25:58
news-image

உலக வங்கி பிரதிநிதிகளை சந்தித்தார் மேல்...

2025-04-24 11:48:48
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்- ஜஹ்ரான் ஹாசிமே...

2025-04-24 11:01:46