(எம்.வை.எம்.சியாம்)
குருநாகல் பகுதியில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் பல்வேறு பகுதிகளில் மோட்டார் சைக்கில் கள் கொள்ளையிட்ட சம்பவங்களுடன் தொடர்புடைய மூவர் திங்கட்கிழமை (டிச. 26) ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 10 கிராம் 360 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது அவர்கள் குருநாகல் பிரதேசத்தில் மோட்டார் சைக்கி ல் இரண்டினை திருடிச் சென்ற சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
மேலும் இதன் போது குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய மற்றொரு நபர் 5 கிராம் 270 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் கடந்த 23 ஆம் திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட ஒருவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் மூவரும் வெல்லவ மற்றும் மாவத்தகம பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளில் மோட்டார் சைக்கிள்களை திருடி சென்ற சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இதன் போது கைது செய்யப்பட்டவர்கள் 17 மற்றும் 18 வயதுடையவர்கள் எனவும் அவர்கள் வெல்லவ மற்றும் மரலுவ பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்
திருடப்பட்ட மூன்று மோட்டார் சைக்கிள்களின் பாகங்கள் கழற்றப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளன.
சந்தேக நபர்கள் இருவரும் குருநாகல் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு அடுத்த மாதம் ஜனவரி 4 ஆம் திகதி வரையில் தடுப்பு காவலில் தடுத்து வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
குருநாகல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM