நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணம் தற்கொலை அல்ல கொலைஎனவும் , உயர் அதிகாரிகளின் அழுத்தத்தினால் சரியாக பிரேத பரிசோதனை செய்யமுடியவில்லை என்று கூறி அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளார்.
தோனியின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் மூலம் பிரபலமான நடிகர் சுஷாந்த் சிங் (34). இவர் கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் 14ஆம் திகதி, தான் தங்கியிருந்த குடியிருப்பில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
செய்தியறிந்த பொலிஸார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். அத்துடன் சிபிஐ இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது.
இதையடுத்து சுஷாந்த் சிங் மரணம், தற்கொலை அல்ல கொலை என்று சுஷாந்த் சிங்கின் நெருங்கிய நண்பர்களும், உறவினர்களும் குற்றம் சாட்டினர்.
இந்த விவகாரத்தில் பல முக்கிய பொலிவூட் பிரபலங்களின் பெயர்களும் அடிபட்டன. போதை மருந்து, நெப்போடிசம் உள்ளிட்ட விவாதங்களை இது கிளப்பியது. இருப்பினும், இந்த விவகாரம் இன்னும் பெரும் மர்மமாகவே இருக்கிறது.
இது பற்றிப் பேசியுள்ள ரூப்குமார் ஷா,
"சுஷாந்த் சிங் ராஜ்புத் இறந்தபோது, பிரேதப் பரிசோதனைக்காக ஐந்து உடல்கள் கூப்பர் மருத்துவமனையில் இருந்தன. அந்த ஐந்து உடல்களைத் தவிர அங்கு இருந்த ஒரு உடல் விஐபி-யின் உடல். அதை உடற்கூராய்வு செய்த போதுதான் அது சுஷாந்த் சிங்கின் உடல் என்று அறிந்தோம். அந்த உடலில் சில காயங்களின் தடயங்கள் இருந்தன, கழுத்திலும் இரண்டு மூன்று காயங்களின் தடயங்கள் இருந்தன. அதைப் பிரேதப் பரிசோதனை ஆய்வில் பதிவு செய்யவேண்டும்.
ஆனால், எங்களின் உயர் அதிகாரிகள் உடலை புகைப்படம் மட்டும் எடுத்தால் போதும் என்று கட்டளையிட்டனர், எனவே அதன்படி செய்தோம். சுஷாந்த் சிங்கின் உடலைப் பார்த்த உடனே இது தற்கொலை அல்ல கொலைதான் என்பதை நான் உணர்ந்தேன். அதை எனது உயர் அதிகாரிகளிடமும் தெரிவித்தேன். இதில் நாம் முறையான விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்பதையும் வலியுறுத்தினேன். ஆனால், எங்கள் உயர் அதிகாரிகள் புகைப்படம் மட்டும் எடுத்துவிட்டு உடலை பொலிஸாரிடம் வரைவில் ஒப்படையுங்கள் என்று கட்டளையிட்டனர். எனவே, இரவில்தான் பிரேத பரிசோதனை செய்தோம்" என்று கூறியுள்ளார்.
இது தற்போது மீண்டும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM