(எம்.வை.எம்.சியாம்)
நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் நேற்று திங்கட்கிழமை (26) இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 23 வயதுடைய இளைஞர் உள்ளிட்ட நால்வர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
குளியாப்பிட்டிய பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கொஸ்ஹென பிரதேசத்தில் பயணித்து கொண்டிருந்த லொறி அதே திசையில் முன்னால் சென்று கொண்டிருந்த வேன் ஒன்றை முந்திச் செல்ல முயன்ற போது எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் நேருக்கு மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன் போது காயமடைந்த மோட்டார் சைக்கிள் செலுத்திய நபர் குளியாப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் 23 வயதுடைய பிங்கிரிய பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவராவார்.
லொறி சாரதியின் கவனயீனம் விபத்து காரணம் என்றும் விபத்து தொடர்பில் லொறி சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குளியாப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை கஹவத்த பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட அம்பலன்வத்த பிரதேசதின் பெல்மடுல்ல இருந்து எம்பிலிப்பிட்டி நோக்கி பயணித்த லொறி எதிர்திசையில் வந்த பஸ் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன் போது பலத்த காயமடைந்த லொறி சாரதி கஹவத்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் 33 வயதுடைய எஹெலியகொட பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவராவார்.
சம்பவம் தொடர்பில் கஹவத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்
மேலும், தனமல்வில பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கிதுல்கோட்டை பிரதேசத்தின் வெல்லவாய இருந்து தனமல்வில நோக்கி பயணித்துகொண்டிருந்த வேன் எதிர்திசையில் வந்த மோட்டார்சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளாகியதில் மோட்டார்சைக்கிள் செலுத்திய நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் 42 வயதுடைய கிதுல்கோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவராவார்.
விபத்து தொடர்பில் வேன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
தனமல்வில பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை கஹட்டகஸ்திகிலிய பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கெகிராவ சந்தியை அண்மித்த பகுதியில் ஹொரவபொத்தான நோக்கி பயணித்து கொண்டிருந்த பாதசாரி ஒருவர் மீது வாகனம் ஒன்று மோதியுள்ளது.
இதன் போது காயமடைந்த பாதசாரதி கஹட்டகஸ்திகிலிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் 64 வயதுடைய கெகிராவ சந்தியை சேர்ந்த ஒருவராவார்.
விபத்தை ஏற்படுத்திய வாகனம் தொடர்பில் இதுவரையில் எந்த வித தகவல்கள் கிடைக்கப் பெறவில்லை.
சம்பவம் தொடர்பில் கஹட்டகஸ்திகிலிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM