இறைவழிபாட்டிற்கு பிறகு ஆலயத்திலிருந்து நேராக வீடு திரும்ப வேண்டுமா..? ஏன்?

Published By: Ponmalar

27 Dec, 2022 | 10:29 AM
image

இன்றைய திகதியில் எம்மில் பலரும் கோவில்களுக்கு சென்று இறைவனை வழிபட்டவுடன், நேராக இல்லம் திரும்பாமல், வழியில் கடைவீதியில் இருக்கும் வணிக வளாகத்திற்கு சென்று, அங்குள்ள நவீன உணவகத்தில் இரவு உணவு அல்லது சிற்றுண்டியை சாப்பிட்டுவிட்டு, அதன் பிறகு அசதியுடன் வீடு திரும்புகிறார்கள். இது சரியானது என ஒரு தரப்பினரும், இது தவறு என ஆன்மீகப் பெரியோர்களும் சொல்கிறார்கள். இதன் உண்மையான பின்னணி என்ன? இறைவழிபாட்டிற்கு பிறகு ஆலயத்திலிருந்து நேராக வீடு திரும்பவேண்டும் என்று ஏன் வலியுறுத்தினார்கள்? இதனை தெரிந்துக்கொள்ள தொடர்ந்து வாசிக்கவும். 

சாமானிய மனிதர்கள் எழுப்பிய ஆலயங்களுக்கும், சித்தர்கள் எழுப்பிய ஆலயங்களுக்கும் வித்தியாசம் இருக்கின்றன. சாமானியர்கள், தத்தமது பெயர் சொல்லவும் அல்லது பொதுநல நோக்கிலும் ஆலயங்களை எழுப்பியிருப்பார்கள். ஆனால் சித்தர்கள், தமது சித்தியின் மூலம் தூரதிருஷ்டியுடன், குறிப்பிட்ட சில நோக்கங்களுக்காகவே ஆலயங்களை எழுப்பினர். 

அக்காலங்களில் அரச பரிபாலனத்தில் சித்தர்களின் அருளும், ஆலோசனையும் பெரிதும் மதிக்கப்பட்டு, வரவேற்கப்பட்டு, நிறைவேற்றப்பட்டன. அது மட்டுமன்றி, அரசாள்பவர்களின் சக்தியை அதிகரித்துக்கொள்வதற்காக, சித்தர்கள் அறிவுரைப்படி கடவுள் விக்கிரகங்கள் ஸ்தாபிக்கப்பட்டு, முறைப்படி பராமரிக்கப்பட்டு வந்தன. அதனால் அந்த ஆலயங்கள் சக்தி நிறைந்தவையாய் விளங்கின.

சித்தர்கள் தாம் பூஜித்து வந்த தெய்வத்துக்காக, ஸ்தாபித்த கோவில்களும், சித்தர்களின் சித்தியுடன் நிறுவப்பட்டதால், அவையும் அபரிமிதமான சக்தி மிகுந்தவையாய் விளங்கின. அவர்கள் இறைவனுக்கு தினசரி மூலிகைகளால், வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள் செய்து, அதற்கான சக்தி நிறைந்த மந்திரங்கள் சொல்லி உரு ஏற்றி வைத்திருக்கும் சக்தி மற்றும் எந்தவித எதிர்பார்ப்புமின்றி அவர்கள் செய்த தியானம், மந்திர உச்சாடனம், செய்யும் தான தர்மங்கள், செய்து வரும் நற்காரியங்கள் இவற்றால் அவர்கள் பெற்று வைத்திருக்கும் சக்தி ஆகிய இரண்டும் சேர்ந்து அந்த ஆலயங்களை மிகவும் சக்தி நிறைந்தவையாய் திகழ்கின்றன. 

சித்தர்கள் எழுப்பிய ஆலயங்கள் இவ்வகையின என்றால், சித்தர்களே மூலவராக விளங்கும் ஜீவ சமாதிகளும் அபரிமிதமான சக்தி நிறைந்தவையாய் விளங்குகின்றன. அதனால்தான் தொடர்ந்து அங்கு சென்று வழிபடும் போது அங்கு நிறைந்துள்ள அபரிமிதமான அதிர்வலைகளால் அவர்களுக்கே தெரியாமல் நிறைய நல்லது நடக்க ஆரம்பிக்கும். அதனால் தான் சித்தர்களையும், சித்தர்கள் கட்டிய ஆலயங்களையும் தரிசித்து விட்டு நேராக வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்று சொல்லப்படுகிறது.

மாறாக, கோவிலிலிருந்து வேறெங்காவது செல்வதால், அந்த அதிர்வலைகள், அவ்வச்சூழலில் உள்ள அதிர்வலைகளால் கலைக்கப்படுகின்றன. இதனால் கோவில் சென்று வருவதன் தாத்பர்யம் குறைகிறது. எந்த நோக்கங்களுக்காக கோவில்களுக்கு செல்கிறீர்களோ அந்த பிரார்த்தனை நிறைவேறாமல் வீரியமிழக்கின்றன. அதனால் இனிமேல் சித்தர்கள் எழுப்பிய ஆலயங்களுக்கு சென்று வழிபட்ட பிறகு நேராக வீடு திரும்புங்கள். உங்கள் எண்ணம் ஈடேறும். 

-வெலியமுனை குருசாமி. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வைகாசி விசாகத்தின் மகிமை 

2024-05-22 14:20:23
news-image

வைகாசி விசாகத்தின் மகத்துவங்கள்

2024-05-22 14:02:32
news-image

மடவல, நலந்தன்ன மலையில் சுடலை மாடன்...

2024-05-16 15:15:32
news-image

நுவரெலியா சீதாஎலிய சீதை அம்மன் ஆலய...

2024-05-12 09:35:40
news-image

புரட்சிக்கவிஞர் பாரதிதாச‌னின் பிறந்தநாளை 'உலகத் தமிழ்...

2024-04-27 19:39:28
news-image

மதுரை சித்திரை திருவிழா 2024 -...

2024-04-24 17:24:26
news-image

இறந்த தம் மூதாதையருடன் இயல்பாக பேசும்...

2024-04-21 10:26:04
news-image

வவுனியா, கோதண்டர் நொச்சிக்குளத்தில் நாகர் கால...

2024-04-18 10:23:08
news-image

'குரோதி' வருடப்பிறப்பு - சுப‍ நேரங்கள் 

2024-04-11 14:47:43
news-image

திருக்கோணேஸ்வரத்தில் சாமி தூக்கிய சுற்றுலா பயணிகள்...

2024-04-06 11:06:59
news-image

சித்தி விநாயகர் கும்பாபிஷேகம்

2024-03-28 16:01:41
news-image

நல்லூர் மனோன்மணி அம்மன் ஆலய பங்குனி...

2024-03-19 16:13:26