அணிசேரா நடுநிலை கொள்கையில் நிலைத்திருங்கள் - புதிய இலங்கை இராஜதந்திரிகளுக்கு பிரதமர் ஆலோசனை

Published By: Digital Desk 2

27 Dec, 2022 | 09:27 AM
image

(எம்.மனோசித்ரா)

இலங்கையானது அணிசேரா நடுநிலை நாடு என்ற நற்பெயரை மேம்படுத்துவதற்கு சகலரும் நட்புறவுடன் செயற்பட வேண்டியதன் அவசியத்தை பிரதமர் தினேஷ் குணவர்தன வலியுறுத்தியுள்ளார்.

பாரம்பரிய இராஜதந்திர முறைக்குப் பதிலாக பொருளாதார இராஜதந்திரத்திற்கு உலகில் முன்னுரிமையளிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் தினேஷ் குணவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.

வெளிநாடுகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள புதிய இலங்கை தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களுக்கும் பிரதமர் தினேஷ் குணவர்தனவிற்குமிடையில் திங்கட்கிழமை (டிச. 26) அலரி மாளிகையில் இடம்பெற்ற விசேட சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் 16 பேர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

முதலீட்டை ஈர்ப்பதற்கும், ஏற்றுமதி மற்றும் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கும், நடுநிலையான, அணிசேரா நாடு என்ற நற்பெயரை மேம்படுத்துவதற்கும்,  நட்புறவுடன் செயல்படுவதன் அவசியத்தை புதிய தூதுவர்களிடம் பிரதமர் தெளிவுபடுத்தினார்.

நாடு எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடி மற்றும் கடன் மறுசீரமைப்பு குறித்து கருத்து தெரிவித்த பிரதமர், முதலீடுகள், கூட்டு முயற்சிகள் மற்றும் இருதரப்பு கூட்டாண்மைக்காக ஒத்துழைக்குமாறு தூதுவர்களிடம் கேட்டுக் கொண்டார்.

அதிக முதலீடு, வேலை வாய்ப்புகள் மற்றும் மேம்பாட்டு உதவிகளைப் பெற, புலம்பெயர்ந்த சமூகம் மற்றும் அவர்களது சங்கங்களுடன் நெருக்கமாகப் பணியாற்ற வேண்டும் என்றும் , இலங்கை விரைவான பொருளாதார மீட்சியை அடைந்து தன்னிறைவு அடைவதற்கும் விவசாயம், கைத்தொழில், தகவல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கும் முன்னெடுக்கப்படும் முயற்சிகளுக்கு நட்பு நாடுகள் ஒத்துழைக்க முடியும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் ஸ்தாபிக்கப்பட்ட முதலீட்டு மற்றும் ஏற்றுமதி ஊக்குவிப்பு குழுக்களுக்கு அதிகபட்ச ஆதரவை வழங்குமாறும் பிரதமர் தினேஷ் குணவர்தன இதன் போது வலியுறுத்தினார்.

இந்த சந்திப்பில் புதிதாக நியமனம் பெற்றுள்ள தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களான முன்னால் வெளிவிவகார செயலாளர் சித்ராங்கனி வாகீஸ்வர (அவுஸ்திரேலியா), முன்னாள் வெளிவிவகார செயலாளர் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே (இந்தோனேஷியா), மனிஷா குணசேகர (பிரான்ஸ்), எச்.எம்.ஜி.ஆர்.ஆர்.கே. மெண்டிஸ் (பஹ்ரைன்), கலாநிதி ஏ.எஸ்.யு. மெண்டிஸ் (வியட்நாம்), வருணி முத்துக்குமாரண (ஜெர்மனி), கபில ஜயவீர (லெபனான்), எம்.எச்.எம்.என். பண்டார (இஸ்ரேல்), கே.கே.தெஷாந்த குமாரசிறி (எத்தியோப்பியா), கலாநிதி சானக எச்.தல்பஹேவா (பிலிப்பைன்ஸ்), பிரியங்கிகா விஜேகுணசேகர (ஜோர்தான்), பி.காண்டீபன் (குவைத்), ஹிமாலி அருணதிலக்க (ஜெனீவா), உதய இந்திரரத்ன (ஐக்கிய அரபு இராச்சியம்) மற்றும் சந்தி சமரசிங்க (மெல்பர்ன்) உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி...

2025-02-10 14:30:09
news-image

ஹொரணையில் போலி கச்சேரி சுற்றிவளைப்பு ;...

2025-02-10 13:57:16
news-image

மீனவர்கள் விவகாரம் இலங்கை மீது இந்தியா...

2025-02-10 14:05:21
news-image

ஜனாதிபதி நிதியத்திலிருந்து முறைகேடாக வழங்கப்பட்ட நிதி...

2025-02-10 14:20:22
news-image

யாழில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த...

2025-02-10 13:16:40
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-02-10 12:51:11
news-image

வவுனியா - தோனிக்கல் பகுதியில் கேரள...

2025-02-10 13:16:05
news-image

கெப் வாகனத்தில் கஞ்சா போதைப்பொருளை கடத்திச்...

2025-02-10 12:45:06
news-image

ஹட்டனில் சிறுத்தை ஒன்றின் சடலம் மீட்பு

2025-02-10 13:10:27
news-image

காங்கேசன்துறை - நாகபட்டினம் இடையே மீண்டும்...

2025-02-10 13:13:37
news-image

கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்திலிருந்து...

2025-02-10 12:19:52
news-image

ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு எதிரான பிடியாணை உத்தரவு...

2025-02-10 12:15:39