அமெரிக்க விமானத்தில் மடிக்கணினி தீப்பிடித்ததால்7 பேர் காயம் : 167 பயணிகள் அவசரமாக வெளியேற்றம்

Published By: Digital Desk 2

27 Dec, 2022 | 08:52 AM
image

அமெரிக்க விமானத்தில் மடிக்கணினி தீப்பிடித்ததால் 7 பேர் காயமடைந்த நிலையில், 167 பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

கரீபியன் நாடான பார்படாசில் இருந்து அமெரிக்காவின் நியூயோர்க் நகருக்கு 167 பயணிகளுடன் விமானம் ஒன்று சென்றது.

இந்த விமானம் ஜோன் கென்னடி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது.

அதை தொடர்ந்து பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து இறங்குவதற்கு தயாராகி கொண்டிருந்தனர்.

அப்போது விமானத்தில் பயணி ஒருவர் வைத்திருந்த மடிக்கணினி திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் பயணிகள் மத்தியில் பதற்றமும், பீதியும் உருவானது.

இதையடுத்து, விமான ஊழியர்கள் பயணிகள் அனைவரையும் அவசர அவசரமாக வெளியேற்றினர். அவசரகால வழி மற்றும் வழக்கமான பாதை வழியாக 167 பேரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

எனினும் அவசரமாக வெளியேறியபோது ஏற்பட்ட நெரிசல் மற்றும் புகையை சுவாசித்தது போன்ற காரணங்களால் 7 பேர் காயமடைந்தனர்.

அவர்களுக்கு விமான நிலையத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை உதவி அளிக்கப்பட்டது. விமானம் தரையிறங்கிய பிறகு தீ விபத்து ஏற்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் பலர்...

2024-06-12 18:00:38
news-image

தமிழக பாஜகவில் மோதல்; மேடையிலேயே கண்டித்த...

2024-06-12 15:09:56
news-image

குவைத்தில் வெளிநாட்டு தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டிடத்தில்...

2024-06-12 14:53:54
news-image

குவைத்தில் தீவிபத்து - 35 பேர்...

2024-06-12 13:56:57
news-image

மகனிற்கு எதிராக நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை...

2024-06-12 12:55:38
news-image

இந்தியாவில் 4 வயது குழந்தைக்கு அரிய...

2024-06-12 12:36:08
news-image

போர்க்களங்களில் -உள்நாட்டு மோதல்களில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை...

2024-06-12 12:12:36
news-image

சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் இந்தியா: திபெத்தில்...

2024-06-12 11:07:26
news-image

போதைப்பொருளிற்கு அடிமையானவர் துப்பாக்கியை கொள்வனவு செய்த...

2024-06-11 21:46:47
news-image

மலாவியின் துணை ஜனாதிபதி விமானவிபத்தில் பலி

2024-06-11 17:49:44
news-image

விவசாயிகளின் நிதி உதவிக்கான திட்டத்தில் கைசாத்திட்டார்...

2024-06-11 19:09:33
news-image

மலாவியின் துணை ஜனாதிபதி பயணித்த விமானம்...

2024-06-11 15:37:30