(ஆர்.யசி )

புதிய அரசியல் அமைப்பு தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இறுதி நிலைப்பாடு வெகுவிரைவில் தெரிவிக்கப்படும். கட்சி மத்தியக்குழு கூட்டம் ஒரு வாரத்தினுள் கூடி ஆராயவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்தது. ஒற்றையாட்சிக்குள் அதிகார பரவலாக்களும்  பௌத்த கொள்கையை உறுதிப் படுத்தும் வகையில் ஏனைய  மத சுதந்திரமும் கையாளப்பட வேண்டும் எனவும் தெரிவித்தது. 

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செய்தியாளர் சந்திப்பு  கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சர் பைசர் முஸ்தப்பா மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

புதிய அரசியல் அமைப்பு உருவாக்கம் தொடர்பில் ஆராயப்பட்டு வருகின்ற போதிலும் இறுதியான ஒரு நிலைப்பாடு இன்னும் எட்டப்படவில்லை. சகல கட்சிகளும் தத்தமது நிலைப்பாட்டில் நின்று ஆராய்ந்து வருகின்றது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் அவ்வாறான ஒரு நிலையில் இருந்து ஆராய்ந்து வருகின்றது. அரசியல் அமைப்பு உருவாக்கம் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மத்தியகுழு கூட்டத்தில் ஆராயப்படும். அதன் பின்னர் வெகுவிரைவில் எமது நிலைப்பாட்டை நாம் அறிவிக்க முடியும். ஜனாதிபதி நாடு திரும்பியவுடன்  அடுத்த ஒருவாரத்தில் நாம் எமது  நிலைப்பாட்டை வெளிப்படுத்துவோம்.