புகைப்படங்கள் மற்றும் சிறிய அளவிலான வீடியோகளை பகிர்ந்துக்கொள்ளும் வசதியினை தரும் இன்ஸ்டாகிராம் தனது பல மில்லியன் கணக்கான வாடிக்கையாளர்களுக்கு நேரடி ஒளிபரப்புக்களை செய்யும் வசதியினை அறிமுகம் செய்துள்ளது.

குறித்த இவ்வசதி தற்போது முதல் முறையாக அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ள அனைத்து இன்ஸ்டாகிராம் பயனர்களும் இவ் வசதியினை இலவசமாகப் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

மேலும் வைரலான நேரடி ஒளிபரப்புக்கள், பிரபல்யமான நேரடி ஒளிபரப்புக்கள் என பல்வேறு வகைகளில் நேரடி ஒளிபரப்புக்களை தெரிவு செய்து பார்த்து மகிழும் வசதியினையும் அறிமுகம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.