அதிக வரிச்சுமை காரணமாக சிறு வணிகங்கள் முடங்கும் - சமிந்த விஜயசிறி

Published By: Vishnu

26 Dec, 2022 | 05:14 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

பொருளாதார நெருக்கடிகள் மற்றும் அதன் விளைவாக ஏற்பட்டிருக்கும் சவால்களுக்கு மத்தியில் சிறு தொழில் முயற்சியாளர்கள்  பாரியதொரு அச்சுறுத்தலுக்கு முகங்கொடுத்து உள்ள நிலையில் அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டுள்ள புதிய வரி விதிப்பானது சிறு வணிக தொழில் முயற்சியாளர்கள் மற்றும் சிறு வணிகங்களை முற்றாக முடங்கும் நிலைக்கு கொண்டு சென்றுள்ளதாக  எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜயசிறி தெரிவித்துள்ளார்.

25 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

நாட்டில் ஏற்பட்டுள்ள அடிப்படை பொருளாதார பிரச்சினைக்கு டொலரின்மையே பிரதான காரணமாகும். டொலரினை பெற்றுக் கொள்வதற்கான  வழிமுறைகளான ஏற்றுமதிகள் குறைவடைந்துள்ளது. நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ளது. வெளிநாட்டு பண வலுப்பல்களும் பாரியவில் குறைவடைந்துள்ளது. 

குறிப்பாக வேலைவாய்ப்பிற்காக வெளிநாடு சென்றுள்ள இலங்கையர்கள் மூலம் தங்களுடைய குடும்பத்தினர்களுக்காக மாதாந்தம் அனுப்படும் பணவலுப்பல்கள் குறைவடைந்துள்ளது. முன்னர் மாதந்தம் 650 மில்லியன் ரூபாவாக காணப்பட்ட மொத்த பண வலுப்பல்கள் தற்பொழுது 50 முதல் 60 மில்லியன்களாக காணப்படுகிறது.

காரணம் ரணில்  ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் நாட்டின் அரசியல் நிலை குறித்து,  அரசியல்வாதிகள் தொடர்பில்  மக்களுக்கு நம்பிக்கையின்மை மற்றும் அவர்களை தலைவர்களாக ஏற்றுக்கொள்ள முடியாத நிலைப்பாட்டில் அவர்கள் இருக்கிறார்கள். இதுவும் நெருக்கடிகளுக்கு காரணமாகும்.

இருப்பினும் அந்நியசெலவானி பெற்று தரக்கூடிய வழிமுறைகளை புறந்தள்ளி  விட்டு  நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து உள்ள இந்த சந்தர்ப்பத்தில் ஓரளவேனும் விழுந்துள்ள நாட்டின் பொருளாதாரத்திற்கு மீளவும் உயிர் மூச்சை பெற்று தரக்கூடிய  சேலையின் போன்று காணப்படக்கூடிய சிறு தொழில் முயற்சியாளர்கள் மீது பாரியதொரு வரிச்சுமையை சுமத்தியுள்ளார்கள்.

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் சிறு தொழில்  முயற்சியில் ஈடுப்பட்டுள்ள வர்த்தகர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்கள் மீது மேலும் தாங்கிக்கொள்ள முடியாத  கடுமையான வரி சுமையை  சுமத்தும் போது அவர்களின் தொழில் துறை முற்றாக வீழ்ச்சியடையும்.

பணவீக்கத்தின் ஊடாக பொருட்கள் சேவைகள் விலைகள் பாரியளவில் அதிகரித்துள்ளது. அதன் மூலம் அந்த நிறுவனங்கள் இலாபம் அடைந்துள்ளதாக அரசாங்கம் கருதுகிறது. அரசாங்கத்தின் கணப்பீடு தவறானது.

பணவீக்கத்திற்கு மத்தியில் பொருட்களின் விலைகள் மூலப் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ள நிலையில் அவர்களிடத்திலிருந்து அதிக வரியை அறவிடும் போது தொழில்துறை வீழ்ச்சியடைந்து மேலும் நாட்டை பாரியதொரு பின்னடைவுக்கு இட்டுச் செல்லும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55