அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ஆர்ப்பாட்டம் மற்றும் எதிர்ப்பு பேரணிகளால் நாடு பரபரப்பான சூழ்நிலைக்கு தள்ளப்படும் என மக்கள் விடுதலை முன்னணி எச்சரித்துள்ளது.

அதனை மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாட்டுக்கு சொந்தமான காணிகள் மற்றும் சொத்துக்கள் ஏனைய நாடுகளுக்கு விற்பனை செய்யப்படுவது பிற்காலத்தில் பாரதூரமான பின்விளைவுகளை ஏற்படுத்தும்.

இதனால் இவ்வாறான திட்டங்களை நடைமுறைப்படுத்த முனையும் அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் ஒன்று திரள வேண்டும் என்றார்.