அவுஸ்திரேலியாவின் வருடத்தின் மிகச் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர் விருதுக்கு ஷேன் வோர்னின் பெயர் சூட்டப்படும் என அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர்.
உலகின் தலைசிறந்த கிரிக்கெட் பந்துவீச்சாளர்களில் ஒருவரான ஷேன் வோர்ன் கடந்த மார்ச் மாதம் தனது 52 ஆவது வயதில் காலமானார்.
இந்நிலையில், வருடத்தின் மிகச் சிறந்த ஆண் டெஸ்ட் வீரருக்கான விருது ஷேன் வோர்னின் பெயரில் வழங்கப்படும் என கிரிக்கெட் அவுஸ்திரேலியா நிறுவனம் திங்கட்கிழமை தெரிவித்துள்ளது.
அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் சிறந்த வீரருக்கான விருது அலன் போர்டரின் பெயரில் வழங்கப்படும். அதற்கு அடுத்து மிக உயர் விருதாக ஷேன் வோர்ன் விருது அமையவுள்ளது.
அவுஸ்திரேலிய, தென் ஆபிரிக்க அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் 2 ஆவது போட்டியின் முதல் நாளில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
145 டெஸ்ட் போட்டிகளில் 708 விக்கெட்களையும் 194 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 293 விக்கெட்களையும் ஷேன் வோர்ன் கைப்பற்றியிருந்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM