இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்ட 'நீரோ' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

Published By: Digital Desk 2

26 Dec, 2022 | 12:45 PM
image

மறைந்த நடிகர் நித்திஷ் வீரா கதையின் நாயகனாக நடித்த 'நீரோ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை இயக்குநர் வெற்றிமாறன் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

இயக்குநர் ஜி. வி. பாலா இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'நீரோ'. இதில் மறைந்த நடிகர் நித்திஷ் வீரா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக புதுமுக நடிகை ரியா நடித்திருக்கிறார். இவர்களுடன் ஆடுகளம் நரேன், ஜோன் விஜய், ரவி மரியா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பால பரணி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சபேஷ் -முரளி இசையமைத்திருக்கிறார்கள்.

ஹாரர் திரில்லர் ஜேனரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை பிரண்ட்ஸ் பிக்சர்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் மரியா அமல்ராஜ் தயாரித்திருக்கிறார். படத்தின் இறுதி கட்டப் பணிகள் அனைத்தும் நிறைவடைந்து வெளியிட்டிற்கு தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்