விஜய் சேதுபதி நடிக்கும் இந்தி திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

Published By: Digital Desk 2

26 Dec, 2022 | 04:57 PM
image

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் தயாராகி இந்தி மற்றும் தமிழில் வெளியாகவிருக்கும் 'மேரி கிறிஸ்மஸ்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

முன்னணி பொலிவூட் இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'மேரி கிறிஸ்மஸ்'. இதில் மக்கள் செல்வன் விஜய சேதுபதி கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக பொலிவுட் நட்சத்திர நடிகை காத்ரினா கைஃப் நடித்திருக்கிறார்.

இவர்களுடன் சஞ்சய் கபூர், வினய் பதக், டினு ஆனந்த், பிரதிமா காஷ்மீ உள்ளிட்ட பல நடித்திருக்கிறார்கள். திரில்லர் ஜேனரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை பிரபல டிப்ஸ் இசை நிறுவனம் மேட்ச்பொக்ஸ் பிக்சர்ஸ் எனும் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்திருக்கிறது.

இந்த திரைப்படத்தின் தலைப்பு 'மேரி கிறிஸ்மஸ்' என சூட்டப்பட்டிருந்ததால், நத்தார் தினமான நேற்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த திரைப்படம் சில காரணங்களால் திட்டமிட்டபடி நேற்று வெளியாகவில்லை. அதற்கு பதிலாக இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட படக்குழுவினர், இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி முதன் முதலில் இந்தியில் நேரடியாக நடித்திருக்கும் திரைப்படம் என்பதாலும், இந்தத் திரைப்படம் தமிழிலும் வெளியாகவிருப்பதாலும் இதற்கான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

இதனிடையே மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழி திரைப்படங்களிலும் நேரடியாக நடித்து வருகிறார் என்பதும், இதனால் அவர் பரபரப்பாக இயங்கி வரும் அகில இந்திய நட்சத்திரமாக உயர்ந்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஏப்ரலில் வெளியாகும் சுந்தர் சி யின்...

2024-03-27 15:40:07
news-image

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மையப்படுத்தி உருவாகும்...

2024-03-27 21:28:48
news-image

'குளோபல் ஸ்டார்' ராம்சரண்நடிக்கும் 'கேம் சேஞ்சர்'...

2024-03-27 21:28:27
news-image

எடிசன் விருது விழா : சிறந்த...

2024-03-27 15:25:27
news-image

ஜெயம் ரவி நடிக்கும் 'ஜீனி' திரைப்படத்தின்...

2024-03-26 17:27:01
news-image

மனைவியை ஒருதலையாக காதலிக்கும் கணவனாக விஜய்...

2024-03-26 19:26:29
news-image

தேஜ் சரண்ராஜ் நடிக்கும் 'வல்லவன் வகுத்ததடா'...

2024-03-26 17:10:13
news-image

ரசிகரை நடிகராக்கிய உலகநாயகன்

2024-03-26 16:49:17
news-image

வெற்றிக்காக 'ஜீனி'யாக நடிக்கும் ஜெயம் ரவி

2024-03-25 21:19:56
news-image

'கொல்லுறாளே கொள்ளை அழகுல ஒருத்தி..'

2024-03-25 17:28:41
news-image

மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட...

2024-03-25 17:29:35
news-image

கல்லூரி மாணவர்களை நம்பிய சந்தானம் படக்...

2024-03-25 17:19:37