சீனாவின் செஜியாங் மாகாணத்தில் நாளாந்தம் 10 இலட்சம் பேருக்கு கொரோனா : விரைவில் இருமடங்காக அதிகரிக்கும் என தகவல்

Published By: Digital Desk 2

26 Dec, 2022 | 10:30 AM
image

சீனாவின் செஜியாங் மாகாணத்தில் நாளொன்றுக்கு 10 இலட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்படுவதாகவும் விரைவில் அது இருமடங்கு அதிகரிக்கும் என்றும் அம்மாகாண அரசு தெரிவித்துள்ளது. 

2020ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உலகெங்கும் கொரோனா தொற்று மிக வேகமாக பரவ ஆரம்பித்துள்ளது. இதையடுத்து உலக நாடுகள் ஊரடங்குக் கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்தன. தொற்று தீவிரம் குறைந்த பிறகு ஊரடங்குக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. ஆனால், சீனா கொரோனா பரவலை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில் ஊரடங்குக் கட்டுப்பாடுகளை கடந்த இரண்டு ஆண்டுகளாக தீவிரமாக கடைபிடித்து வந்தது. இதனால் நாட்டின் பொருளாதாரம் பெரும் சரிவுக்கு உள்ளானதோடு, மக்களும் உளவியல் ரீதியாக மிகப்பெரும் நெருக்கடிக்கு உள்ளாகினர். இதனால் சீனாவின் தீவிர ஊரடங்குக்கு உலக அளவில் கடும் விமர்சனங்கள் எழுந்தன. 

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு சீனா அதன் ஊரடங்குக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தியது. அதையடுத்து அந்நாட்டில் கொரோனா தொற்றின் புதிய திரிபு மிக வேகமாக பரவி வருகிறது.

ஷாங்காய்க்கு அருகில் உள்ள தொழில் மாகாணமான செஜியாங்கில் 6.65 கோடி மக்கள் வசிக்கின்றனர். இந்த மாகாணத்தில் தினமும் 10 இலட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்படுவதாகவும் புத்தாண்டுக்குப் பிறகு இந்த எண்ணிக்கை இருமடங்கு உயரும் என்று எதிர்பார்ப்பதாகவும் அம்மாகாண அரசு தெரிவித்துள்ளது.

சீனாவில் கொரோனா உயிரிழப்பு அதிகரித்துள்ளதாகவும், மயானங்கள் நிரம்பி வழிவதாகவும் சர்வதேச செய்தி ஊடகங்கள் கூறுகின்றன. ஆனால், சீன அரசு கடந்த வாரத்தில் கொரோனா தொற்றால் உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை என்று தெரிவித்துள்ளது.

இந்நிலையில், சீனா அரசு கொரோனா தொற்று தொடர்பாக உண்மையான தகவல்களை வெளியிட வேண்டும் என்றும் அப்போதுதான் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாப்பரசரின் உடல்நிலை குறித்து வத்திக்கானின் அறிவிப்பு

2025-02-15 13:04:33
news-image

படகுடன் மகனை விழுங்கிய திமிங்கிலம் -...

2025-02-14 17:35:40
news-image

உடல்நலப்பாதிப்பு - பாப்பரசர் மருத்துவமனையில் அனுமதி

2025-02-14 16:24:16
news-image

புட்டினுடன் டிரம்ப் தொலைபேசி உரையாடல் -...

2025-02-14 15:11:08
news-image

செர்னோபில் அணுஉலையை ரஸ்ய ஆளில்லா விமானம்...

2025-02-14 14:31:15
news-image

புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட பின்னரும் ஜேர்மனி நாடு...

2025-02-14 13:13:29
news-image

உக்ரைன் யுத்தம் குறித்து இன்று முக்கிய...

2025-02-14 12:22:29
news-image

ட்ரம்பை சந்தித்த இந்திய பிரதமர் .....

2025-02-14 11:07:20
news-image

ஜேர்மனியில் பொதுமக்கள் மீது காரால் மோதிய...

2025-02-14 07:41:47
news-image

தாய்வானில் வணிக வளாகத்தில் வெடிப்பு சம்பவம்...

2025-02-13 15:32:35
news-image

ஆப்கான் தலைநகரில் ஒரே வாரத்தில் இரண்டாவது...

2025-02-13 14:24:17
news-image

உக்ரைன் குறித்த அமெரிக்காவின் கொள்கைகளில் மாற்றம்?

2025-02-13 12:40:09