டுவிட்டர் வலைத்தளம் தனது ஆண்ட்ராய்ட் மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்கள் வாயிலாக லைவ் வீடியோ ஆப்ஷனை அறிமுகம் செய்துள்ளது.
ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களுக்கான ட்விட்டர் செயலியில் லைவ் வீடியோ வசதி வழங்கப்பட்டுள்ளது. பேஸ்புக் போன்றே, டுவிட்டர் பயனர்களும் ஒற்றை ட்வீட் மூலம் வீடியோக்களை நேரலையில் மேற்கொள்ள உதவும். ட்விட்டரில் இந்த ஆப்ஷனை செயல்படுத்த பெரிஸ்கோப் ஆப் தேவைப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
புதிய ஆண்ட்ராய்ட் மற்றும் ஐஓஎஸ் அப்டேட்களின் மூலம் டுவிட்டர் செயலியில் லைவ் வீடியோ ஆப்ஷன் இந்திய பயனர்களுக்கு கிடைக்கிறது. ட்விட்டரில் லைவ் வீடியோ பயன்படுத்த பெரிஸ்கோப் செயலி உங்களின் ஸ்மார்ட்போனில் கட்டாயம் இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
டுவிட்டரில் ட்வீட் பட்டனை கிளிக் செய்ததும் வாடிக்கையாளர்களுக்கு 3 ஆப்ஷன்கள் திரையில் கிடைக்கும் - கேமரா மூலம் தரவுகளை பதிவேற்றம் செய்வது, இங்கு கேமரா பட்டனை கிளிக் செய்தால் போட்டோ, வீடியோ மற்றும் லைவ் வீடியோ உள்ளிட்ட ஆப்ஷன்கள் கிடைக்கும். இனி உங்களின் ஸ்மார்ட்போனில் பெரிஸ்கோப் இன்ஸ்டால் செய்யப்படவில்லை எனில் அதனை உடனே டவுன்லோடு செய்யக்கோரும் ஆப்ஷன் கிடைக்கும்.
ஸ்மார்ட்போனில் பெரிஸ்கோப் இன்ஸ்டால் செய்து, உங்களின் தகவல்களை பதிவு செய்ததும் டுவிட்டரின் லைவ் வீடியோ அம்சம் செயல்பட துவங்கிவிடும். லைவ் வீடியோவினை கிளிக் செய்ததும் உங்களை பின்தொடரும் அனைவராலும் வீடியோவினை நேரலையில் பார்க்க முடியும். வேண்டுமெனில் லைவ் வீடியோவினை உங்களின் ஸ்மார்ட்போனிலும் பதிவு செய்து கொள்ள முடியும்.
லைவ் வீடியோ அம்சத்தினை முதலில் பேஸ்புக் நிறுவனம் தான் அறிமுகம் செய்தது, இதனை தொடர்ந்து டுவிட்டர் நிறுவனமும் இந்த அம்சத்தினை வழங்கியுள்ளது. எனினும் டுவிட்டர் லைவ் வீடியோ எந்தளவு வரவேற்பை பெறும் என்பதை இனி வரும் நாட்களில் டுவிட்டரிலேயே தெரிந்து கொள்ளலாம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM