அம்பாந்தோட்டை துறைமுகத்தில் வைத்து ஊடகவியலாளர் ஒருவரை தாக்கிய சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு கோட்டையில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டத்தினை ஊடக அமைப்புகள் இணைந்து முன்னெடுத்துள்ளன.

கடந்த டிசம்பர் 10 ஆம் திகதி அம்பாந்தோட்டை துறைமுகத்தில் வைத்து ஊடகவியலாளர் மீது கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தன தாக்கிய சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.