(எம்.எப்.எம்,.பஸீர்)
பாராளுமன்ற விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் ஆலோசகராக இருந்து இராஜினாமா செய்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஆசு மாரசிங்க சி.ஐ.டி.யில் இன்று முறைப்பாடளித்துள்ளார்.
பேராசிரியர் ஆஷு மாரசிங்க, அவரது காதலியின் செல்லப் பிராணியான நாய்க் குட்டியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக, 23 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஊடக சந்திப்பொன்றூடாக அது குறித்த காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் பகிரங்கப்படுத்தப்பட்டன.
ஆஷு மாரசிங்கவுடன் கடந்த 2 வருடங்களாக திருமணம் முடிக்காமல் ஒன்றாக வாழ்ந்த அவரது காதலி எனக் கூறப்படும் ஆதர்ஷா கரடான , முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திரவுடன் இணைந்து ஊடக சந்திப்பொன்றினை நடாத்தி இதனை வெளிப்படுத்தியிருந்தார்.
இந் நிலையிலேயே சமூக வலைத் தளங்களில், குறித்த காணொளிகள் தற்போது வைரலாகி வருகின்றன.
இந் நிலையில் இன்று சி.ஐ.டி.க்கு தனது சட்டத்தரணியுடன் சென்ற ஆஷு மாரசிங்க முறைப்பாடொன்றினை பதிவு செய்துள்ளார்.
இது தொடர்பில் ஆஷு மாரசிங்கவிடம் ஊடகங்கள் வினவிய போது,
"இது சட்டத்தின் முன் உள்ள விவகாரம். இது பொய்யான விடயம். அதனால்தான் இதைப் பற்றி நான் பேசமாட்டேன். என் சட்டத்தரணி இதைப் பற்றி பேசுவார்." என குறிப்பிட்டார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ஆஷு மாரசிங்க, தனிப்பட்ட காரணங்களை முன்வைத்து, பாராளுமன்ற விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் ஆலோசகர் பதவியிலிருந்து, 23 ஆம் திகதி ஹிருணிக்கா பிரேமச்சந்திர ஊடகவியலாளர் சந்திப்பை நடாத்த சில மணித்தியாலங்களுக்கு முன்னதாக விலகினார்.
இந்த ஊடக சந்திப்பில், மாரசிங்கவை இணையத்தில் சந்தித்த பின்னர் இரண்டு வருடங்களாக அவரது காதலியாக இருந்த ஆதர்ஷா கரடானா என்ற பெண்ணும் கலந்துகொண்டார்.
குறித்த பெண்ணுக்கு சொந்தமான செல்லப் பிராணியான நாய்க் குட்டியே ஆஷு மாரசிங்கவினால் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக இதன்போது குற்றம் சுமத்தப்பட்டது.
முகநூலில் ஆஷு மாரசிங்கவை சந்தித்ததன் பின்னர் தான் மாரசிங்கவின் காதலியாக இருந்ததாகவும், அவருடன் இரண்டு வருடங்கள் திருமணம் செய்துகொள்ளாமலேயே ஒரே வீட்டில் வாழ்ந்ததாகவும் அப்பெண் ஊடகங்களிடம் கூறினார்.
தனது செல்லப் பிராணியான நாயின் நடத்தையில் மாற்றம் தெரிந்த நிலையில், தனது படுக்கை அறையில் கையடக்கத் தொலைபேசியின் கமராவை 'ஒன்' செய்து வைத்த போது ஆஷு மாரசிங்கவின் இந்த நடத்தை குறித்த காணொளியில் பதிவானதாக அவர் குறிப்பிட்டார்.
இரண்டு வருட உறவு முழுவதும் மாரசிங்கவால் தானும் உடல்ரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
மாரசிங்கவின் நடத்தை குறித்து ஜனாதிபதியின் மனைவி மற்றும் ஜனாதிபதியின் செயலாளரிடம் தாம் முறைப்பாடு செய்ததாகவும், ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் கரடானா எனும் குறித்த பெண் கூறினார்.
எனினும் பாராளுமன்ற விவகார ஆலோசகர் பதவியிலிருந்து, ஜனாதிபதியின் கட்டளைக்கு அமையவே ஆஷு மாரசிங்க 23 ஆம் திகதி விலகியதாக அறிய முடிகின்றது.
இந் நிலையில் இந்த பாலியல் துன்புறுத்தல் விவகார சம்பவம் தொடர்பில் பேராசிரியர் ஆஷு மாரசிங்கவின் சட்டத்தரணி ஊடகங்களிடம் பின்வருமாறு விளக்கமளித்தார்.
" ஆஷு மாரசிங்க தொடர்பாக மிகவும் கேவலமான, பொய்யான, செம்மை செய்யப்பட்ட காணொளி ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. மேலும், சில திரிபுபடுத்தப்பட்ட புகைப்படங்களை முன்வைத்து 23,24 ஆம் திகதிகளில் செய்தியாளர் மாநாடு நடைபெற்றது. இது தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளன.
எனது சேவை பெறுநர் பணிப்பாளர் பதவியில் இருக்கும் ஒரு நிறுவனத்தில், ஒரு பெண்ணுடன் தகராறு உள்ளது. அந்த தகராறு காரணமாக எனது சேவை பெறுநரிடம் அதிக அளவு பணம் கோரப்பட்டுள்ளது. அதுதான் இந்த சம்பவங்களின் பின்னணி." என தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM