பாலனின் பிறப்பு நெருக்கடிக்கு விடுதலையாக அமைய வேண்டும் - நத்தார் வாழ்த்துச் செய்தியில் கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார்

Published By: Vishnu

24 Dec, 2022 | 07:19 PM
image

பொருளாதார நெருக்கடிமிக்கதான காலகட்டத்தில் நாட்டு மக்கள் எதிர்நோக்கியுள்ள அனைத்து பிரச்சினைகளுக்கும் இறைமகன் இயேசுக்கிறிஸ்துவின் பிறப்பு விடுதலையாக அமைய வேண்டுமென்று பிரார்த்திப்பதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அ. அரவிந்தகுமார் விடுத்துள்ள 'கிறிஸ்மஸ்' வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். 

அவர் மேலும் தெரிவித்துள்ளதபவது,

பாவத்திலும் அடிமைத்தனத்திலும் வாழும் மக்கள் விடுதலையடைய வேண்டும். ஏழைகள், ஒதுக்கப்பட்டவர்கள் மறுவாழ்வு பெற வேண்டும். அனைத்து மக்களும் இவ்வுலகில் ஒன்றுபட்டு மகிழ்ச்சியுடன் பகிர்ந்து வாழவேண்டுமென்பது இயேசு பாலனின் பிறப்பின் தத்துவமாகும். இப்பிறப்பின் மகத்துவத்தை கிறிஸ்மஸ் தினத்துடன் அர்த்தமுள்ளதாக்குவோம்.

கொரோனா தாக்கம் காரணமாக கடந்த வருடம் கிறிஸ்மஸ் தினம் களைகட்டவில்லை. இம்முறை பொருளாதார  நெருக்கடி மேலோங்கியுள்ளது.

காரிருளில் நடந்து வந்த மக்கள் பேரொளியைக் கண்டவர்கள் என்கிறது சத்திய வேதம்.  அவ்வகையில் பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ள மக்களுக்கு இம்முறை 'கிறிஸ்மஸ்' விடுதலையின் செய்தியை வழங்குமென்று எதிர்பார்ப்போம்.

இக்கிறிஸ்மஸ் பண்டிகை கிறிஸ்தவர்களுக்கு மட்டுமன்றி அனைத்து மக்களுக்குமான பொதுப் பண்டிகையாக இருந்து வருகின்றமையினால் அனைவருக்கும் கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-03-22 06:14:23
news-image

யாழில் நண்பர்களுடன் கடலில் குளிக்க சென்ற...

2025-03-22 05:04:39
news-image

சர்வதேச பல்கலைக்கழகங்களை நாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை...

2025-03-22 04:49:45
news-image

அரசாங்கம் விடுவித்த 323கொள்கலன்களும் யாருக்கு சொந்தமானவை;...

2025-03-22 04:45:51
news-image

யாழ்.நூல் எரிப்பு தொடர்பில் குழு அமைத்து...

2025-03-22 04:43:41
news-image

நாடளாவிய ரீதியில் 400க்கும் மேற்பட்ட வேட்புமனுக்கள்...

2025-03-22 04:39:00
news-image

நிவாரண பொதியில் உள்ளடங்குவது சமபோசாவா அல்லது...

2025-03-22 04:34:24
news-image

வட,கிழக்கின் தேவைகளை கண்டறிந்தே நிதியொதுக்கீட்டைச் செய்ய...

2025-03-22 04:27:18
news-image

மே மாதத்தில் 8,9ஆம் திகதிகளில் மாத்திரம்...

2025-03-22 04:24:35
news-image

மீண்டும் ஐ.தே.க. ஆட்சியமைப்பதற்காக தீவிரமாக செயற்படுகின்றோம்...

2025-03-22 04:15:02
news-image

பேருந்து நடத்துனர் - லண்டன் பெண்ணுக்கு...

2025-03-22 04:10:32
news-image

பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலிப பீரிஸுக்கு...

2025-03-21 21:25:13