அடுத்த ஆண்டில் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்போவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளமை மகிழ்ச்சியான விடயமாகும்.
மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேற இனிதான நத்தார் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதோடு அதற்கான பேச்சுவார்த்தைகள் இதய சுத்தியுடன் இடம்பெற வேண்டும் என தொழிலாளர் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் விடுத்துள்ள நத்தார் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தமது நத்தார் வாழ்த்துச் செய்தியில்,
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொவிட் தொற்று காரணமாக சோபை இழந்து காணப்பட்ட நத்தார் பண்டிகை இம்முறை விலைவாசி உயர்வுக்கு மத்தியில் சிறப்பாக கொண்டாடப்படுகின்றமை மகிழ்ச்சியான விடயமாகும்.
உலகெங்கும் வாழ்கின்ற கிறிஸ்தவ மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதோடு, மக்களை துன்பத்திலிருந்து மீட்டெடுக்க அவதரித்த யேசு பிரானின் வழியில் இனங்களுக்கு இடையில் அமைதியைப் பேணும் வகையில் சமாதான முயற்சிகள் இடம்பெறுவது வரவேற்கத் தக்கது.
ஜனாதிபதியின் அபிலாஷைக்கு சகலரும் ஒத்துழைப்பு வழங்கி நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவ வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM