இந்திய நாட்டில் உள்ள தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபானக் கடைகளை மூட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபானக் கடைகளில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதால் அடிக்கடி விபத்து ஏற்படுவதாகக் கூறி உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பளித்தது.
அதன்போது, தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூடும்படி மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
மேலும், நெடுஞ்சாலைகளில் தற்போது உள்ள மதுபானக் கடைகளின் லைசென்ஸ் மார்ச் 31ஆம் திகதி வரை செல்லும் என்று தெரிவித்த நீதிபதிகள் அந்த கடைகளுக்கு அனுமதி பத்திரத்தை புதுப்பிக்கக்கூடாது என்றும், நெடுஞ்சாலை பகுதிகளில் புதிதாக அனுமதி பத்திரம் எதுவும் வழங்கக்கூடாது என்றும் உத்தரவிட்டனர்.
மேலும், தேசிய நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டர் தொலைவுக்குள் மதுக்கடைகள் இருக்கக்கூடாது என்றும் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM