( எம்.எப்.எம்.பஸீர்)
நாடளாவிய ரீதியில் 269 பொலிஸ் பொறுப்பதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
23 ஆம் திகதி வெள்ளிக்கிழைமை முதல் அமுலாகும் வகையில், இந்த இடமாற்றமானது பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் அவ்வமைச்சின் செயலரின் தேவைக்கு அமைய வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களத்துக்குள் சர்ச்சை ஏறட்டுள்ளது.
பொலிஸ் மா அதிபரின் எதிர்ப்பையும் மீறி, அதனை கவனத்தில் கொள்ளாது இந்த இடமாற்றம் வழகப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன.
தேர்தலை இலக்குவைத்து இந்த இடமாற்றம் இவ்வாறு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களத்துக்குள் பரவலாக பேசப்படுகின்றது.
பொலிஸ் மா அதிபரின் கையெழுத்து மற்றும் நேரடி உத்தரவு எதுவும் இன்றி, பொலிஸ் திணைக்களத்தின் மனித வள முகாமைத்துவ பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் எம்.என். சிசிர குமாரவின் கையெழுத்துடன், பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலரின் உத்தரவுக்கு அமைய இந்த இடமாற்றம் வழகப்பட்டுள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலர், இந்த இடமாற்ற கட்டளையை கடந்த 2020 நவம்பர் 20 ஆம் திகதி வெளியிடப்பட்ட 2202/04 ஆம் இலக்க வர்த்தமானிக்கு அமைய வெளியிட்டுள்ளார்.
எனினும் 21 ஆவது திருத்தச் சட்டம் அமுலுக்கு வந்துள்ள நிலையில், குறித்த வர்த்தமானி அறிவித்தல் வலுவிழந்துள்ளதாகவும், வலுவிழந்த வர்த்தமானியின் கீழ் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலர் இந்த இடமாற்றங்களை வழங்கியுள்ளதாகவும் பொலிஸ் திணைக்களத்துக்குள் பரவலாக பேசபப்டுகின்றது.
இது தொடர்பில் சட்ட மா அதிபரும் பொலிஸ் ஆணைக்குழுவுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கியுள்ளதாக அறிய முடிகின்றது.
20 ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் அரச சேவை ஆணைக் குழுவுக்கு வழங்கப்பட்டிருந்த பொலிஸ் அதிகாரிகளின் இடமாற்றம், பதவி உயர்வு உள்ளிட்ட விடயங்கள், 21 ஆவது அரசியல் திருத்தச் சட்டம் பிரகாரம் மீண்டும் பொலிஸ் ஆணைக் குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கடந்த 15 ஆம் திகதி சட்ட மா அதிபர் ஏ/379/2022 எனும் இலக்கமிடப்பட்ட கடிதம் ஊடாக ஆலோசனை வழங்கியுள்ளதாக பொலிஸ் ஆணைக் குழுவின் செயலர் தமரா டி பெரேரா கடந்த 20 ஆம் திகதி பொலிஸ் மா அதிபருக்கும் கடிதம் ஊடாக அறிவித்துள்ளார்.
அவ்வாறான நிலையிலேயே தற்போது, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலரின் உத்தரவின் கீழ் 269 பொலிஸ் பொறுப்பதிகாரிகள் இடமாற்றப்பட்டுள்ளமை சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM