செலான் வங்கி நாடெங்கிலுமுள்ள இளைஞர்களுக்கு பல்வேறு அனுகூலங்களை தமது புத்தம் புதிய சேமிப்பு கணக்கான ‘செலான் Seylfie’ இளைஞர் கணக்கின் மூலம் வழங்க தயாராகவுள்ளது.

கவர்ச்சிகரமான சேமிப்பு மற்றும் நிதிச் சேவைக்கு மேலதிகமாக செலான் வங்கி டயலொக் உடன் இணைந்து பரஸ்பர நன்மைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கவுள்ளது. செலான் Seylfie கணக்கு வைப்பாளர்கள் தமது மாதாந்த வட்டியை தமது கணக்கிலிருந்து டயலொக் மொபைலிற்கு ரீலோட் ஆக மாற்றலாம். செலான் வங்கியின் ளுநலடகநை கணக்கு வைத்திருக்கும் இளைஞர்களுக்கு டயலொக்கிடமிருந்து இணைப்புக்கள் மற்றும் உபகரணங்களை கொள்வனவு செய்யும் போது சிறப்பு விலைக்கழிவுகள் மற்றும் சலுகைகளை பெற்றுக் கொள்ளலாம். வங்கி அதன் டிஜிட்டல் வட்டி என்னும் கருப்பொருளை எதிர்காலத்தில் அதன் ஏனைய வாடிக்கையாளர்களுக்கும் வழங்கவுள்ளது.

இடமிருந்து வலமாக: 

திஸர கஸ்தூரியாராச்சி - தலைவர் - முற்கொடுப்பனவு மொபைல் வணிகம், சிதத் சந்திரசேன - சிரேஷ்ட பொது முகாமையாளர் - டிஜிட்டல் வணிகம் மற்றும் விளம்பரப்படுத்தல், அசங்க பிரியதர்ஷன - தலைவர் வணிகம் -  மொபைல் தொடர்பாடல், Dr. ஹான்ஸ்  விஜயசூரிய - குழு பிரதம நிறைவேற்று அதிகாரி, டயலொக் Axiata PLC, கபில ஆரியரத்ன - இயக்குனர் / பிரதம நிறைவேற்று அதிகாரி, நிமல் திலகரட்ன - சிரேஷ்ட பிரதி பொது முகாமையாளர் - நடவடிக்கைகள், சாணக குணவர்த்தன - பிரதி பொது முகாமையாளர் - தகவல் தொழிநுட்பம், திலான் விஜயசேகர - பிரதி பொது முகாமையாளர் - சந்தைப்படுத்தல் மற்றும் பிரத்தியேக வங்கியியல், டினேஷ் ஜெபமணி - வங்கி பொறுப்புகள் / சேவை மற்றும் புதிய தொழிநுட்ப ஊடகம்