நள்ளிரவில் பசியெடுப்பது ஏன்?

Published By: Nanthini

24 Dec, 2022 | 03:17 PM
image

ம்மில் பலரும் இரவு உணவு எடுத்துக்கொண்ட பின் உறங்க சென்றுவிடுவர். இவர்களில் சிலருக்கு நள்ளிரவு நேரத்திலும், நள்ளிரவை கடந்த பொழுதுகளிலும் அகோர பசி எடுக்கும். 

இதனால் உறக்கத்தை தொலைத்து, பசியாறுவதற்காக ஏதேனும் உணவுப் பொருளை தேடுவர். பிறகு அகால நேரம் என்பதால் பிஸ்கட், பாண், வாழைப்பழம், பால், தண்ணீர் போன்றவற்றை உட்கொண்டுவிட்டு மீண்டும் உறங்குவர். 

இந்த உணவுப்பழக்கத்தை Night Eating Syndrome எனப்படும் இரவில் பசியாறும் பாதிப்பு என்றும், ஒரு நோயாளி மூன்று காரணங்களால் இத்தகைய பாதிப்புக்கு ஆளாகிறார் என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். 

கட்டுப்பாடற்ற இரத்த சர்க்கரை அளவுடையவர்கள், மருத்துவரின் ஆலோசனையுடன் மாத்திரைகளை எடுத்துக்கொண்டு இரவில் உறங்கும்போது, இரத்த சர்க்கரையின் அளவு இயல்பான அளவை விட மிகவும் குறைந்துவிடுவதன் காரணமாக அவர்களுக்கு பசி எடுக்கும். 

குறை இரத்த சர்க்கரையின் அளவு காரணமாகத்தான் பசி ஏற்படுகிறது என்பதனை பிரத்தியேக பரிசோதனையின் மூலம் துல்லியமாக அவதானித்த பிறகு, மருத்துவர்கள் பரிந்துரைக்கும் உணவுகளை குறைவாக அந்தத் தருணத்தில் எடுத்துக்கொள்ளலாம். 

இதன் மூலம் அந்த பிரச்சினைக்கு உடனடியாக நிவாரணத்தை பெற இயலும்.

இரத்த சர்க்கரையின் அளவில் எந்த மாறுபாடும் இல்லாதவர்களுக்கு இத்தகைய பாதிப்பு ஏற்பட்டால், அவர்களுக்கு 'அசிடிட்டி' எனப்படும் வயிற்றுப்புண் காரணமாகவும் பசி ஏற்படக்கூடும். இவர்களும் மருத்துவரின் ஆலோசனையின்படி சுடுநீர், பால் அல்லது மாத்திரைகளை சாப்பிட்டு, நிவாரணம் பெறலாம்.

வேறு சிலருக்கு தூக்கமின்மை நோய் இருந்தாலும், இரவு நேரத்தில் பசியெடுக்கும். இவர்கள் அந்த நேரத்தில் ஏதேனுமொன்றை சாப்பிடுவதை விட, உறக்கமின்மைக்கான சிகிச்சையை மேற்கொண்டால், இவர்களின் பசி அடங்கிவிடும். தூக்கமின்மை பிரச்சினையும் சீராகிவிடும்.

இதனை அலட்சியப்படுத்தினால், தூக்கத்தில் நடக்கும் வியாதி ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு அதிகம். 

எனவே, இரவில் பசி எடுத்தால், அதற்கான காரணம் என்ன என்பதை மருத்துவர் பரிந்துரைக்கும் பரிசோதனைகளை மேற்கொண்டு துல்லியமாக அவதானித்த பின், அவர் கூறும் வழிமுறையை உறுதியாக கடைப்பிடிக்க வேண்டும். 

மேலும், இரவில் பசியெடுப்பது என்பது உணவுக் கடிகார இயக்கத்தின்படி தவறு. அதனால் இதனை உடனடியாக சீர்ப்படுத்திக் கொள்ள வேண்டியது மிக அவசியமாகும்.

- டொக்டர் ராமகிருஷ்ணன்

(தொகுப்பு: அனுஷா)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹண்டிங்டன்ஸ் நோய் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-03-26 16:32:47
news-image

இடியோபதிக் பல்மனோரி ஃபைப்ரோசிஸ் எனும் நுரையீரல்...

2024-03-24 21:02:07
news-image

அர்த்ரால்ஜியா எனும் மூட்டு வலி பாதிப்பிற்குரிய...

2024-03-20 21:20:55
news-image

செபோர்ஹெக் கெரடோசிஸ் எனும் தோல் பாதிப்பிற்குரிய...

2024-03-20 09:17:28
news-image

குரல்வளை வீக்கம் : நவீன சிகிச்சை

2024-03-18 18:23:28
news-image

ஆர்டியோஸ்கிளிரோஸிஸ் ரெட்டினோபதி எனும் விழித்திரை பாதிப்பிற்குரிய...

2024-03-16 14:38:19
news-image

உள்காது பாதிப்புகளை கண்டறிவதற்கான நவீன பரிசோதனைகள்

2024-03-15 18:16:00
news-image

பெருங்குடல் வீக்கமும் நவீன சிகிச்சையும் 

2024-03-14 16:20:48
news-image

சிறுநீரக ஆரோக்கியம், அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம்!...

2024-03-14 15:59:51
news-image

ஆசனவாய் புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் சத்திர...

2024-03-13 22:50:05
news-image

மயோகார்டிடிஸ் எனும் இதய தசையில் ஏற்படும்...

2024-03-08 17:40:06
news-image

நான் ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர் எனும்...

2024-03-07 13:48:04