பாராளுமன்றில் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு பெரமுனவின் உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு கடிதம்

Published By: Digital Desk 3

24 Dec, 2022 | 05:41 PM
image

(இராஜதுரை ஹஷான்)

நாட்டில் கடந்த மார்ச் மாதம் முதல் ஜூலை மாதம் வரை இடம்பெற்ற பல்வேறு வன்முறை சம்பவங்கள் தொடர்பிலான விசாரணை அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் 107 பாராளுமன்ற உறுப்பினர்கள் எழுத்து மூலமாக ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

கடந்த மே மாதம் 09 ஆம் திகதி காலி முகத்திடல் 'கோட்டாகோகம' மற்றும் 'மைனா கோ கம' போராட்டகளத்திற்கு தாக்கல் மேற்கொள்ளப்பட்டதை தொடர்ந்து நாட்டில் பல்வேறு பகுதியில் வன்முறை சம்பவங்கள் இடம்பெற்றன.

இச்சம்பவம் தொடர்பில் ஆராய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் ஒப் த பிலிட் வசந்த கரன்னாகொட தலைமைத்துவத்தின் கீழ் முன்னாள் விமான படைத்தளபதி மார்ஷல் ஒப் த எயார்போஸ் ரொஷான் குணதிலக மற்றும் முன்னாள் இராணுவ தளபதி ஜெனரால் தயா ரத்னாயக்க ஆகியோரை உள்ளடக்கிய குழுவை நியமித்தார்.

முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் ஒப் த பிலிட் வசந்த கரன்னாகொட தலைமையிலான குழுவினர் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மிரிஹான பகுதியில் உள்ள தனிப்பட்ட இல்லத்தின் முன்பாக இடம்பெற்ற போராட்டம்,மே மாதம் 09 ஆம் திகதி கோட்டா கோ கம,மைனா கோ கம ஆகிய போராட்ட களத்தின் மீதான தாக்குதல், பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரல படுகொலை,பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம் மற்றும் ஜூலை மாதம் 09 ஆம் திகதி ஜனாதிபதி செயலகம்,ஜனாதிபதி மாளிகையை போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் கைப்பற்றியமை,தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்கு தீ வைத்தமை உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பில் ஆராய்ந்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.

சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்த அறிக்கையை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்குமாறு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் 107 பாராளுமன்ற உறுப்பினர்கள் கைச்சாத்திட்டு ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளார்கள்.மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரை நாட்டில் இடம் பெற்ற வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்த பொலிஸ்,இராணும் உட்பட பாதுகாப்பு தரப்பினர் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை,நிலைமையை கட்டுப்படுத்த பாதுகாப்பு தரப்பின் உயர் அதிகாரிகள் கீழ் நிலை தரப்பினருக்கு கட்டளை பிறப்பிக்கவில்லை என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவினர் சுட்டிக்காட்டி ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31