(இராஜதுரை ஹஷான்)
மின்சார கட்டணத்தை மீண்டும் அதிகரித்தால் அடுத்த மாதம் முதல் நாடளாவிய ரீதியில் உள்ள சகல பேக்கரி மற்றும் சிற்றுண்டிச்சாலைகளையும் மூடவேண்டிய நிலை ஏற்படும்.
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவை டெங்கு ஒழிப்பு மத்திய நிலையமாக அறிவித்தால், நுளம்பு பெருக்கத்தையாவது கட்டுப்படுத்த முடியும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்தார்.
கொழும்பில் சனிக்கிழமை (டிச. 24) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இலங்கை மின்சார சபைக்கு நட்டம் நட்டம் என குறிப்பிடும் மின்சாரத்துறை அமைச்சர் காஞ்சன விஜேசேகர மின்சார சபை நட்டமடைவதற்கான காரணத்தை பகிரங்கப்படுத்தவில்லை.
நாட்டு மக்களுக்கு இலவசமாக மின்சாரம் விநியோகிக்கப்படவில்லை என்பதை அமைச்சர் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
நாட்டு மக்களால் தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு மின்சார கட்டணம் தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது. மின்சாரத்தை சிக்கனமாக பாவித்தாலும், குறைந்தபட்ச மின்கட்டணம் 5000 ரூபாவாக காணப்படுகிறது.
இதனால் நாட்டு மக்கள் சொல்லொணா துயரங்களை எதிர்கொண்டுள்ளார்கள்.
மின்கட்டண அதிகரிப்பால் பேக்கரி மற்றும் சிற்றுண்டிச்சாலை கட்டமைப்பு முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய விலைக்கமைய பேக்கரி மற்றும் சிற்றுண்டிச்சாலை உணவுப் பொருட்களின் விலைகளை தீர்மானித்துக்கொள்ள முடியாதளவு நெருக்கடி உள்ளது.
இவ்வாறான பின்னணியில் எதிர்வரும் மாதம் மீண்டும் மின்சார கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.
மின்கட்டணத்தை மீண்டும் அதிகரித்தால் அடுத்த மாதம் முதல் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பேக்கரி மற்றும் சிற்றுண்டிச்சாலைகளையும் மூடவேண்டிய நிலை ஏற்படும்.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு என்கிற ஒன்று எதற்காக உள்ளது என்பதை ஆராய வேண்டும்.
அடுத்த மாதம் மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டால் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவை டெங்கு ஒழிப்பு மத்திய நிலையமாக அறிவிக்க வேண்டும். அதன் மூலம் நுளம்பு பெருக்கத்தையாவது கட்டுப்படுத்த முடியும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM