தமிழில் முன்னணி குணச்சித்திர நடிகராக வலம் வரும் நடிகர் சார்லி முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'உடன்பால்' எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்த திரைப்படம் எதிர்வரும் 30ஆம் திகதி ஆஹா டிஜிட்டல் தளத்தில் நேரடியாக வெளியாகிறது.
இயக்குநர் கார்த்திக் சீனிவாசன் இயக்கத்தில் தயாராகியுள்ள 'உடன்பால்' படத்தில் சார்லியோடு இணைந்து லிங்கா, விவேக் பிரசன்னா, தீனா, அபர்னதி, காயத்ரி உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள்.
மதன் கிறிஸ்டோபர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்துக்கு சக்தி பாலாஜி இசையமைத்திருக்கிறார்.
தந்தைக்கும் மகனுக்குமான உறவை விவரிக்கும் இந்த படத்தை டி கம்பனி நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே.வி. துரை தயாரித்திருக்கிறார்.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகி வெற்றி பெற்ற நிலையிலேயே தற்போது இதன் முன்னோட்டம் வெளியாகியுள்ளது.
சார்லி தன்னுடைய பேரனுக்கு கதை சொல்வது போல் அமைந்திருக்கும் இந்த முன்னோட்டத்தின் ஊடாக தந்தைக்கும் மகனுக்கும் இடையேயான உறவு முரண்பாடுகள், சொத்து பிரச்சினைகள் மையப்படுத்தப்பட்டுள்ளன.
இதனால் எதிர்பார்த்ததை விட படத்துக்கு அதிக வரவேற்பு கிடைத்திருக்கிறது.
இந்தத் திரைப்படம் தியேட்டரில் வெளியாகாமல், நேரடியாக ஆஹா டிஜிட்டல் தளத்தில் வெளியாகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM