இயக்குநரும் நடிகருமான சேரன் கதாநாயகனாக, முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'தமிழ்க்குடிமகன்' திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
இசக்கி கார்வண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'தமிழ்க்குடிமகன்' படத்தில் சேரன் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக மலையாள நடிகை பிரியா ஜோ நடித்திருக்கிறார். இவர்களுடன் லால், எஸ்.ஏ. சந்திரசேகர், துருவா, தீப்ஸிகா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்துக்கு சாம் சி.எஸ். இசையமைத்திருக்கிறார்.
சாதிய பாகுபாடுகளை மையப்படுத்தி தயாராகியுள்ள இந்த படத்தை லட்சுமி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.
இப்படத்தின் படப்பிடிப்புப் பணிகள் முழுமையாக நிறைவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அண்மையில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையிலேயே படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.
இதில் சேரன், ஒடுக்கப்பட்ட சாதியை சேர்ந்தவராகவும், அவரை சாதி அடையாளத்துடன் ஏனைய கதாபாத்திரங்கள் காண்பதும், இதனை எதிர்த்து அவர் போராடுவதுமான காட்சிகள் இடம்பெற்றிருப்பதால் படம் பற்றிய எதிர்பார்ப்பு பலருக்குள் நிரம்பி வழிகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM