(கோலாலம்பூரிலிருந்து ரொபட் அன்டனி)

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக மலேஷியாவில்  ஆர்ப்பாட்டம் செய்யவுள்ளதாக கூறப்படுகின்றமை தொடர்பில் மலேஷியாவின்   பாதுகாப்பு தரப்பினருக்கு தெரியும். அது  தொடர்பில் நாங்கள் கவலையடையவேண்டியதில்லை. ஆனால் அது  தொடர்பில் இந்நாட்டு     அரசாங்கம் தேவையான  நடவடிக்கைகளை  எடுக்கும்.   தேவையான   பாதுகாப்பை    மலேஷிய அரசாங்கம் வழங்கும் என்று மலேஷியாவுக்கான இலங்கை தூதுவர் இப்ராஹிம் அன்சார்  தெரிவித்தார். 

ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளதாக கூறப்படுகின்றமை குறித்து நாங்கள் கவலையடையவேண்டியதில்லை.ஜனநாயக நாட்டில் ஜனநாயக சூழலில் இவ்வாறான  ஆர்ப்பாட்டங்ககள் நடப்பதுண்டு. அது  தொடர்பில் நாங்கள் கவலையடைய வேண்டியதில்லை.    இதனால்  எமது  நிகழ்ச்சிநிரலில் எவ்வாறான    தடையும்  ஏற்படாது என்றும் அவர் குறிப்பிட்டார். 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று  உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு  மலேஷியாவுக்கு சென்றுள்ள நிலையில் அவருக்கு எதிராக  கோலாலம்பூரில்  புலம் பெயர்ந்தோர் ஆர்ப்பாட்டம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறித்து வினவியபோதே  அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மலேஷியாவுக்கான இலங்கை தூதுவர் இப்ராஹிம் அன்சார் இது குறித்து மேலும் குறிப்பிடுகையில் 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக மலேஷியாவில்    ஆர்ப்பாட்டம் செய்யவுள்ளதாக கூறப்படுகின்றமை தொடர்பில் மலேஷியாவின்   பாதுகாப்பு தரப்பினருக்கு தெரியும். நாம் அது தொடர்பில்  மலேஷிய பாதுகாப்பு  தரப்பினருக்கு அறிவித்துள்ளோம். 

பாதுகாப்பு தரப்பினர்  தேவையான  நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். இது   ஒரு சிறிய குழுவினால் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.  

மலேஷியாவில் தமிழ்  புலம்பெயர்  மக்கள் அதிகம் உள்ளனர். அவர்கள் இதில்  தொடர்புபட்டுள்ளார்களா என்று கூற முடியாது. அது  தொடர்பில் நாங்கள் கவலையடையவேண்டியதில்லை. ஜனநாயக நாட்டில் ஜனநாயக சூழலில் இவ்வாறான  ஆர்ப்பாட்டங்ககள் நடப்பதுண்டு.  ஆனால் அது  தொடர்பில் இந்நாட்டு     அரசாங்கம் தேவையான  நடவடிக்கை எடுக்கும்.   தேவையான   பாதுகாப்பை    மலேஷிய அரசாங்கம் வழங்கும். 

அது  தொடர்பில் நாங்கள் கவலையடைய வேண்டியதில்லை.    இதனால்  எமது  நிகழ்ச்சிநிரலுக்கு  எவ்வாறான    தடையும்  ஏற்படாது. 

மலேஷியாவுடனான  எமது உறவு பழமையானது.   மலேஷியாவுக்கு 1957 ஆம் ஆண்டு சுதந்திரம் கிடைத்ததும் அதனை நாங்கள் அங்கீகரித்து  இராஜ தந்திர உறவை ஆரம்பித்தோம். வர்த்தக  உறவில் சிறந்த  முன்னேற்றம் இரண்டு நாடுகளுக்கும் இடையில் காணப்படுகின்றது. 

மலேஷிய பிரதமருடனான  இருதரப்பு சந்திப்பின்போது  ஐந்து உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படவுள்ளன.  குறிப்பாக  இளைஞர்  ஒத்துழைப்பு   சுற்றுலா, விவசாயம், பெருந்தோட்டத்துறை, கலாசாரம் ஆகிய துறைகளில் ஐந்து உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படவுள்ளன.   இதன்மூலம் இரண்டு நாடுகளுக்கும்   எதிர்காலத்த் பாரிய நன்மைகள் கிடைக்கும். அரசியல் பொருளாதார உறவு  மேலும் வளர்ச்சியடையும் என்றார்.