த்ரிஷா நடிக்கும் 'ராங்கி' படத்தின் முன்னோட்டம் வெளியீடு

Published By: Nanthini

24 Dec, 2022 | 12:23 PM
image

மிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகைகளில் ஒருவரான த்ரிஷா கதாநாயகியாக நடித்திருக்கும் 'ராங்கி' திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

எம்.சரவணன் இயக்கத்தில் உருவாகியுள்ள  புதிய திரைப்படம் 'ராங்கி'. இதில் த்ரிஷாவோடு அனஸ்வரா ராஜன், லிசி அண்டனி, ஜோன் மகேந்திரன், கோபி கண்ணதாசன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

முன்னணி நட்சத்திர இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் எழுதிய கதைக்கு கே.ஏ. சக்திவேல் ஒளிப்பதிவு செய்ய, சி. சத்யா இசையமைத்திருக்கிறார். 

எக்ஷன், என்டர்டெய்னர் ஜேனரில் தயாராகியிருக்கும் இந்த படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறது.

இம்மாதம் 30ஆம் திகதி வெளியாகவிருக்கும் இப்படத்தின் முன்னோட்டம் தற்போது வெளியாகியுள்ளது. 

வெளிநாடுகளில் நடைபெறும் கதைச் சம்பவங்களை கொண்டதாக உள்ள படத்தின் முன்னோட்டத்தில் தீவிரவாதிகள், கடத்தல் போன்றவை இடம்பெற்றிருப்பதாலும், எக்ஷன் காட்சிகளாலும் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

நடிகை த்ரிஷா எக்ஷன் காட்சிகளில் அதிரடியாக நடித்திருப்பதால் இந்தத் திரைப்படம் வணிக ரீதியாக வெற்றி பெறும் என திரையுலக வணிகர்கள் கருதுகிறார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right