போதைப்பொருள்கடத்தல் கும்பலை இலக்குவைத்து திருக்கோவிலில் விசேட அதிரடிப்படையினர் நடவடிக்கை ; வாகனங்கள் கைப்பற்றப்பட்டன

Published By: Digital Desk 3

23 Dec, 2022 | 03:29 PM
image

வாகனங்களில் போதைப்பொருளை கடத்தி வந்த குழுவினரை திருக்கோவில் விசேட அதிரடிப்படையினர் தேடி கைது செய்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று இராணுவ புலனாய்வு துறையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றினை அடுத்து நேற்று வியாழக்கிழமை (டிச22)  திருக்கோவில் விசேட அதிரடிப்படையினர் சுற்றி வளைப்பை மேற்கொண்டனர். இதன்போது இரு வாகனங்களை கைப்பற்றிய விசேட அதிரடிப்படையினர்  50 கிராம் 139 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளையும் மீட்டுள்ளனர்.

அத்தோடு, 36 வயது சந்தேக நபரை கைது செய்து கல்முனை தலைமையக பொலிஸாரிடம்  நீதிமன்ற நடவடிக்கைக்காக ஒப்படைத்துள்ளனர்.

இவ்வாறு கல்முனை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட வாகனங்களில் ஒரு வேன் மற்றும் கார் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதேவேளை தப்பி சென்ற சந்தேக நபர்கள் மற்றும் வாகன உரிமையாளர்கள் என இனங்காணப்பட்டவர்களின் வீடுகள் அமைந்துள்ள பகுதிகள் விசேட அதிரடிப்படை மற்றும் பொலிஸாரினால் கல்முனை பகுதியில் சோதனை இடப்பட்டுள்ளன.

இதன்போது தப்பி சென்ற சந்தேக நபர்கள்  கைது செய்யப்படுவார்கள் என கல்முனை தலைமையக  பொலிஸார் குறிப்பிட்டனர்.

மேலும் கல்முனை கடற்கரை பள்ளிவாசல் வீதியில் இன்று (23) காலை கார் ஒன்றிலிருந்து  'ஐஸ்' போதைப்பொருள் விசேட அதிரடிப்படையினரால்  மீட்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவளிக்கவுள்ளதாக பிள்ளையான் உறுதியளித்தார்...

2024-06-22 22:11:18
news-image

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

2024-06-22 22:22:37
news-image

அரசாங்கமும் எதிர்க்கட்சியிலுள்ள வேலையாற்றத் தெரியாத கட்சியும்...

2024-06-22 16:47:00
news-image

போதைப்பொருட்களுடன் 536 பேர் கைது

2024-06-22 22:12:51
news-image

இரண்டு முச்சக்கரவண்டிகள் மோதி விபத்து ;...

2024-06-22 22:21:27
news-image

தமிழ் அரசியல் தலைவர்களின் நிலைப்பாடுகளை இந்திய...

2024-06-22 16:58:15
news-image

ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த கொழும்புவாசி கைது...

2024-06-22 18:26:32
news-image

பாதாள உலக கும்பலைச் சேர்ந்த வாழைத்தோட்டம்...

2024-06-22 16:49:56
news-image

நோயாளியின் மோதிரம், சிறுதொகைப் பணம், கைப்பை...

2024-06-22 18:49:06
news-image

திருகோணமலையை வந்தடைந்தது இந்திய கடற்படையின் கமோர்டா...

2024-06-22 22:24:50
news-image

காட்டு யானைகளின் அட்டகாசத்தால் பயிர்கள், உடைமைகளை...

2024-06-22 16:55:38
news-image

பதுளையில் மோட்டார் சைக்கிள் விபத்து ;...

2024-06-22 16:51:52