தொடர் கொலையாளி சார்ள்ஸ் சோப்ராஜ் நேபாள சிறையிலிருந்து விடுதலை

Published By: Sethu

23 Dec, 2022 | 02:31 PM
image

1970களில் தெற்காசியா மற்றும் தென்கிழக்காசிய நாடுகளில் பலரை, குறிப்பாக வெளிநாட்டு உல்லாசப் பயணிகளை கொலை செய்ததாக குற்றச்சுமத்தப்பட்ட தொடர்கொலையாளி சார்ள்ஸ் சோப்ராஜ் (78), நேபாள சிறையிலிருந்து இன்று விடுவிக்கப்பட்டார்.

இந்திய தந்தைக்கும், வியட்நாமிய தாய்க்கும் மகனாக பிறந்த சார்ள்ஸ் சோப்ராஜ், பிரெஞ்சு பிரஜையாவார்.

1970களில் தெற்காசியா மற்றும் தென்கிழக்காசிய நாடுகளில் 20 இற்கும் அதிகமானோரின் கொலை தொடர்பில் சார்ள்ஸ் சோப்ராஜ்மீது குற்றச்சாட்டுகள் உள்ளன. 

இவற்றில் 14 கொலைகள் தாய்லாந்தில் இடம்பெற்றன.  பிகினி கில்லர் (bikini killer) சேர்ப்பன்ட்  (Serpent)) ஆகிய பட்டப்பெயர்களும் சார்ள்ஸ் சோப்ராஜுக்கு உள்ளன,

1976 முதல் 1997 வரை இந்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டிருந்தார்.

சிறையிலிருந்து விடுதலையான பின்னர் அவர் பிரான்ஸுக்கு சென்றார். 2003 ஆம் ஆண்டு அவர் நேபாளத்துக்குத் திரும்பிய நிலையில்  நேபாள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். 

1975ஆம் ஆண்டு இரு வெளிநாட்டவர்களை கொலை செய்தமை தொடர்பான வழக்கில் சார்ள்ஸ் சோப்ராஜுக்கு ஆயுள் தண்டனை விதித்து 2004 ஆம் ஆண்டு நேபாள நீதின்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், 78 வயதான சார்ள்ஸ் சோப்ராஜை ஆரோக்கிய பாதிப்புகள் காரணமாக சிறையிலிருந்து விடுதலை செய்யுமாறு நேற்று முன்தினம் நேபாள நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனால், இன்று வெள்ளிக்கிழமை நேபாள சிறையிலிருந்து சார்ள்ஸ் சோப்ராஜ் விடுவிக்கப்பட்டார். 2 அவர் பிரான்ஸுக்கு நாடு கடத்தப்படவுள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 11:11:08
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10
news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41