தமிழர்களுக்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா தீர்வுவழங்க முன்வரும்போது எதிர்த்தவரே தற்போதைய ஜனாதிபதி ரணில் - சாணக்கியன்

Published By: Vishnu

23 Dec, 2022 | 01:41 PM
image

கடந்த 2001 ஆம் ஆண்டு ஜனாதிபதியாக இருந்த சந்திரிகா அம்மையார் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு வழங்க முற்படும்போது அதனை அப்போது எதிர்கட்சியில் இருந்த தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்த்தார்.

ஆனால் தற்போதைய எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கு ஆதரவு வழங்குவதை நாம் வரவேற்கின்றோம் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் மூச்சு என்னும் தொனிப் பொருளில் 22 ஆம் திகதி வியாழக்கிழமை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸா 39 இலட்சம் ரூபா பெறுமதியான இரத்த சுத்திகரிப்பு இயந்திரத்தை வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த காலங்களில் அவ்வப்போது தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு வழங்க முற்படும் போது எதிர்கட்சி தலைவர்கள் எதிர்த்து தடையாக இருந்தனர்.

இருந்தபோதும் அண்மையில் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸா உடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் அவர் தமிழ் மக்களுக்கு ஒரு நிரந்தரமான அரசியல் தீர்வு வழங்கவேண்டும்; தீர்கப்படவேண்டிய விடயம் அதற்கு அவரது கட்சி ஆதரவு வழங்கும் என்றார்.

நிரந்தரமான ஒரு அரசியல் தீர்வை இந்த அரசாங்கத்தின் ஊடாக இந்த காலப்பகுதியிலே வருமா ? இல்லையா? என்பது இரண்டாவது விடயம் ஆனால் அவ்வாறு வருவதற்கு சந்தர்ப்பம் இருந்தால் எதிர்வரும் காலங்களில் பூரணமான ஆதரவை எதிர்பார்க்கின்றோம்.

கிழக்கு மாகாணத்தில் உள்ள அம்பாறை ,மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் மொனராகலை, பதுளை மாவட்டங்களில்  இருதய சத்திர சிகிச்சைக்கு ஒரு இடமும் இல்லை அந்த மக்கள் யாழப்பாணம் சென்று சிகிச்சை பெறவேண்டியுள்ளது.

கிழக்கு மாகாண மக்கள் பதுளை மாவட்ட தமிழ் பேசும் மக்கள் இருதய நோயால் செத்தால் பறவாய் இல்லை நாங்கள்  இனவாதிகள் என்று செயற்பட்ட இந்த மொட்டு அரசாங்கம் இனவாத அரசாங்கம் என்பதற்கு இதைவிட வேறு சாட்சியமில்லை.

எனவே எதிர்வரும் காலத்தில் நாட்டின் தலைவராக வரப்போகும் எதிர்கட்சி தலைவரே முதலாவது வேலையாக மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இருதய சத்திரசிகிச்சை நிலையமொன்றை அமைத்துக்கொடுக்க வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அலி சப்ரி ரஹீம் தொடர்பில் ஏன்...

2023-09-24 19:44:10
news-image

கலைஞர்கள், ஊடகவியலாளர்களுக்காக சீன அரசாங்கத்தின் உதவியுடன்...

2023-09-24 19:10:51
news-image

மாகாண அதிகாரம் மத்திக்கு : ஆளுநர்...

2023-09-24 19:31:50
news-image

மன்னாரில் நடைபெறவிருந்த தேசிய மீலாத்துன் நபி...

2023-09-24 19:32:58
news-image

ஏமாற்றமளித்துள்ள ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின்...

2023-09-24 19:49:13
news-image

போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை கோரப்படக்கூடாது...

2023-09-24 19:52:19
news-image

கிழக்கு மாகாணத்தின் பாதுகாப்பு நிலைமை வலுவடைந்துள்ளது...

2023-09-24 19:52:41
news-image

வலுவானதும் சுபீட்சமானதுமான இலங்கையை கட்டியெழுப்புவதற்கான ஒத்துழைப்பு...

2023-09-24 19:53:15
news-image

மட்டக்களப்பில் டெங்கு நோய் தீவிரம் :...

2023-09-24 17:35:26
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் திருட்டில் ஈடுபட்ட ...

2023-09-24 16:57:18
news-image

மட்டு. ஷரிஆ பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டுக்கு இலங்கை...

2023-09-24 16:42:45
news-image

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலினால் ஏற்பட்ட பாதிப்புக்கு...

2023-09-24 16:11:20