(எம்.எம்.சில்வெஸ்டர்)
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யாழ்ப்பாணம்- பருத்தித்துறை பிரதான வீதியின் கூட்டுறவுஎரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் வியாழக்கிழமை (டிச. 22) இடம்பெற்ற வாகன விபத்தில் 68 வயதுடைய ஆணொருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணத்திலிருந்து பருத்தித்துறை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த தனியார் பஸ், பாதையின் குறுக்கே சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தவர் மீது மோதியதிலேயே இந்த வாகன விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
பலத்த காயத்திற்குள்ளானவரை யாழ் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதுடன், சடலத்தை யாழ் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் நீர்வேலியைச் சேர்ந்தவர் ஆவார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM