வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் புத்தூர் நூலக நிகழ்வு 

Published By: Nanthini

23 Dec, 2022 | 12:12 PM
image

லிகாமம் கிழக்கு பிரதேச சபையின் புத்தூர் நூலக தேசிய வாசிப்பு மாத நிகழ்வுகள் கடந்த புதன்கிழமை (டிச. 21) புத்தூர் சோமாஸ்கந்தா கல்லூரியில் நடைபெற்றன.

இந்த நிகழ்வுக்கு நூலகர் திருமதி. கர்சனமாலா உதயகுமாரன் தலைமையேற்றார். 

இதில் வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ், யாழ்ப்பாண பல்கலைக்கழக நூலகர் சிவபாக்கியநாதன் கேதீஸ்வரன், சபையின் செயலாளர் இராமலிங்கம் பகீரதன், சோமாஸ்கந்தா கல்லூரி அதிபர் சின்னத்தம்பி திரிகரன் ஆகியோர் விருந்தினர்களாக வருகை தந்து நிகழ்வினை  சிறப்பித்ததோடு, அரச அதிகாரிகள், ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் புத்தூர் நூலகத்தினால் வருடாந்தம் வெளியிடப்படும் 'புதுவை நாதம்' நூலை தவிசாளர் தியாகராஜா நிரோஷ் வெளியிட்டார்.

அவரிடமிருந்து நூலின் முதல் பிரதியினை சித்த சுதேச வைத்தியர் இளையவன் செல்லத்துரை பெற்றுக்கொண்டார். 

தொடர்ந்து நூலுக்கான நயவுரையினை ஆசிரியர் திருமதி. கேதீஸ்வரி ஆனந்தரட்ணம் வழங்கினார்.

அத்தோடு புத்தூர் சோமாஸ்கந்தா கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்வுகள், அதிதிகளின் உரைகள், அரிச்சுவடி முன்பள்ளி மாணவர்களின் கலை நிகழ்வுகள் என தமிழர் பண்பாட்டை பிரதிபலிக்கும் பல்வேறு கலை கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றன. 

மேலும், நூலக வாரத்தினை முன்னிட்டு பிரதேச சபையின் நூலகத்தினால் நடத்தப்பட்ட போட்டிகளுக்கான பரிசில்களும் வழங்கப்பட்டன.

இதேவேளை பிரதேசத்தில் சிறந்த வீட்டு நூலக பராமரிப்புக்காக ப. கஜேந்திரன் கெளரவிக்கப்பட்டதோடு, சிறந்த வீட்டுத் தோட்ட பயனாளிகளும் கௌரவிக்கப்பட்டனர்.

நூலகங்களுக்கு இடையே தேசிய நூலக மற்றும் சுவடிகள் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டுப் போட்டியில் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் புத்தூர் நூலகம் நாடளாவிய ரீதியில் 3ஆம் இடத்தை பெற்றதற்கான விருதினை கடந்த வாரம் ஜயவர்த்தன பல்கலைக்கழக துணைவேந்தரிடம் நூலகர் திருமதி. கர்சனமாலா உதயகுமாரன் பெற்றிருந்தார். 

அந்த விருதை இந்நிகழ்வில் பிரதேச மக்களுக்கு அறிமுகப்படுத்தியதுடன், சபையில் அதனை காட்சிப்படுத்துவதற்காக பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷிடம் நூலகரினால் விருது கையளிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு வஜிரா பிள்ளையார் கோவிலில் வழிபாடுகளை...

2025-03-22 15:30:24
news-image

சுவாமி விவேகானந்தா கலாசார நிலையத்தின் ஏற்பாட்டில்...

2025-03-22 13:03:04
news-image

IDM நேஷன் கெம்பஸ் இன்டர்நெஷனலின் இப்தார்...

2025-03-22 11:22:56
news-image

மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின்...

2025-03-21 21:16:23
news-image

கொழும்பு - மகளிர் கல்லூரி பெருமையுடன்...

2025-03-21 16:23:31
news-image

அவிசாவளை சீரடி சாயி பாபா ஆலய...

2025-03-20 17:21:15
news-image

யாழ். கொழும்புத்துறை, வளன்புரம் புனித சூசையப்பர்...

2025-03-19 13:23:04
news-image

மலையக வாழ் மக்களுக்கு இலவச இருதய...

2025-03-19 13:19:32
news-image

அரசாங்க தகவல் திணைக்களத்தில் ஊடகவியலாளர்களுக்காக நடைபெற்ற...

2025-03-19 11:13:40
news-image

யாழில் தமிழ் கலை இலக்கிய மாநாடும்...

2025-03-18 12:55:59
news-image

கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற எழுத்தாளர்...

2025-03-18 10:49:19
news-image

அரபு நியூஸ் இணையத்தளம் ஏற்பாடு செய்திருந்த...

2025-03-18 03:36:52