கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் துயரில் சிக்குண்டுள்ள இலங்கையின் புற்றுநோயாளர்கள்

Published By: Rajeeban

23 Dec, 2022 | 11:45 AM
image

ரொய்ட்டர்

இலங்கையின் சிறிய நகரான மகரஹமவில் பிரியந்த குமாரசிங்க தனது இரண்டு பிஸ்கட்கள் சிறியதேநீர் மற்றும் புற்றுநோய் மருந்துகளுடன் தனது நாளை ஆரம்பிக்கின்றார்.

2021 இல் விவசாயியான அவருக்கு நுரையீரல் புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது- இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடைய தொடங்கிய அந்த ஆண்டில் அவருக்கு சிகிச்சை ஆரம்பமானது .

கடும் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் பலவாரகால அமைதியின்மைக்கு மத்தியில் அவர் தனது வீட்டிலிருந்து 155 மைல் தொலைவில் உள்ள புற்றுநோய் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக செல்ல முடியாத நிலை காணப்பட்டது.

கடந்த வருடம் ஜூன் ஜீலை ஆகஸ்ட் மாதங்களில் என்னால் சிகிச்சை பெற முடிந்திருக்குமானால் எனது நோயின் தாக்கம் குறைவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்பட்டன என அவர் ரொய்ட்டருக்கு தெரிவித்தார்.

அது சாத்தியமில்லாததால்  எனது நோய் தீவிரமடைந்துள்ளது என அவர் தெரிவித்தார்.

சுதந்திரத்திற்கு பின்னர் இலங்கை எதிர்கொண்ட மோசமான பொருளாதார நெருக்கடியால் தங்கள் சிகிச்சைகளை தொடர முடியாதநிலைக்கு தள்ளப்பட்ட  பெருமளவு இலங்கையர்களில் இவரும் ஒருவர்.

பாரிய மருந்துதட்டுப்பாடு காரணமாக இலங்கை மருத்துவமனைகள் பெரும் நெருக்கடிகளை சந்தித்துள்ளன,இது கடந்த 8 மாதங்களில் மேலும் தீவிரமடைந்துள்ளது என இலங்கையின் மிகப்பெரிய மருத்துவர் சங்கம் ரொய்ட்டருக்கு தெரிவித்தது.

அனைத்து மருத்துவமனைகளும் மருந்து தட்டுப்பாட்டை எதிர்கொள்கின்றன பரசிட்டமோல் விட்டமின்சி போன்றவற்றை வெளிநோயாளர்களிற்கு வழங்குவதில் கூட சிரமம் காணப்படுகின்றது என அரசமருத்துவ அதிகாரிகள் சங்கத்தின்  பேச்சாளர் வாசன் இரட்ணசிங்கம் தெரிவி;த்தார்.

புற்றுநோய் மற்றும் கண்கிசிச்சை போன்றவற்றிற்கான மருத்துவமனைகள் நன்கொடைகளின் உதவியுடன் இயங்குகின்றன எனவும் அவர் தெரிவித்தார்.

கொரோனா பெருந்தொற்று காரணமாக சுற்றுலாத்துறையின் இழப்பு வெளிநாட்டில் உள்ள இலங்கையர் அனுப்பும் வருமானம் வீழ்ச்சி பிழையான தருணத்தில் முன்னெடுக்கப்பட்ட வரிசலுகைகள் போன்றவற்றினால் டொலர் தட்டுப்பாடு ஏற்பட்டு இலங்கையால் அத்தியாவசிய இறக்குமதிகளிற்கு செலுத்துவதற்கான பணம் இல்லாமல் போனதை தொடர்ந்து இலங்கை நெருக்கடிக்குள் சிக்கியது.

பல மாதகாலமாக நாட்டின் 22 மில்லியன் மக்கள் நீண்டநேரம் மின்துண்டிப்பு மற்றும் பாரிய எரிபொருள் தட்டுப்பாடு போன்றவற்றை எதிர்கொண்டனர்.

பொருளாதார நெருக்கடியால் உருவான ஆர்ப்பாட்டங்கள் ஆயிரக்கணக்கான மக்கள் வீதிக்கு இறங்கி ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவின் வீட்டை ஆக்கிரமித்ததை தொடர்ந்து அவர் பதவியிலிருந்து அகற்றப்பட்டார்.

இலங்கையின் நாணயம் பெறுமதி இழந்துள்ளமையும்  வரலாறு காணாத பணவீக்கமும்  குமாரசிங்க போன்ற நடு;த்தர வர்க்க குடும்பங்களை வாழ்க்கையின் மிக நெருக்கடியான நிலைக்கு தள்ளியுள்ளது- அவர்கள் அதிகரித்து வரும் வாழ்க்கை செலவினை எதிர்கொள்வதற்கான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஆனால் அந்த குடும்பம் இன்னுமொரு நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.

புற்றுநோய் தற்போது குமாரசிங்கவின் கழுத்து முதுகெலும்பு வரை பரவியுள்ளது என மருத்துவர்கள் அஞ்சுகின்றனர் என அவரது 23 வயது மனைவி தெரிவித்தார்.

அவர்கள் தற்போது எம்;ஆர்ஐ ஸ்கான் பரிசோதனைக்காக காத்திருக்கின்றனர் அதன் மூலம் அடுத்த கட்ட சிகிச்சை குறித்து அவர்கள் தீர்மானிக்க முடியும்,அவர்கள் மருத்துவமனைக்கு அருகில் தற்போது வாழ ஆரம்பித்துள்ளனர் - உறவினர் ஒருவர் வீட்டில் அவர்களின் ஐந்து வயது மகனை உறவினர்கள் பராமரிக்கின்றனர்.

குமாரசிங்க காய்கறி விற்பவர் அவற்றை அவரது பெற்றோர் தற்போது பார்த்துக்கொள்கின்றனர்.

பணவீக்கத்திற்கு அப்பால் கடந்த வருட இரசாயன தடையும் அவரது வருமானத்திற்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது,உரம் ஒரு மூட்டை 1,600 ரூபாயிலிருந்து 30,000 ரூபாயாக அதிகரித்தது என்கின்றார் அவர்.

ஒவ்வொரு மாதமும் எனக்கு 70,000 ரூபாய் தேவை என்கின்றார் அவர்.

வைத்தியசாலையில் மருந்துகள் இல்லை வெளியே மருந்தகங்களில் அவற்றை கொள்வனவு செய்யவேண்டும் ஒவ்வொரு மருந்தும் ஆயிரம் ரூபாய்க்கு மேலாகின்றது என்கின்றார் அவர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41