ஜெவ்னா கிங்ஸ் வரலாறு படைக்குமா ? அல்லது கலம்போ கிங்ஸ் சாதிக்குமா ? - 6 கோடி ரூபா பணப்பரிசு பகிரப்படவுள்ளது !

Published By: Digital Desk 5

23 Dec, 2022 | 01:41 PM
image

(நெவில் அன்தனி)

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் நடத்தப்பட்டு வரும் லங்கா பிறீமியர் லீக் இருபது 20 கிரிக்கெட் போட்டியில் 3ஆவது தொடர்ச்சியான தடவையாக சம்பியன் பட்டத்தை திசர பெரேரா தலைமையிலான ஜெவ்னா கிங்ஸ் சுவீகரித்து வரலாறு படைக்குமா?

அல்லது முதல் தடவையாக இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றுள்ள ஏஞ்சலோ மெத்யூஸ் தலைமையிலான கலம்போ ஸ்டார்ஸ் கிண்ணத்தை சுவீகரித்து வரலாற்றை மாற்றி அமைத்து சாதிக்குமா? என்பதைத் தீர்மானிக்கும் எல் பி எல் இறுதிப் போட்டி இன்று நடைபெறவுள்ளது.

இந்த இறுதிப் போட்டி கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் இன்று வெள்ளிக்கிழமை (23) இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

முதலாவது அத்தியாயத்தில் ஜெவ்னா ஸ்டாலியன்ஸ் என்ற பெயரிலும் இரண்டாவது அத்தியாயத்தில் ஜெவ்னா கிங்ஸ் என்ற பெயரிலும் சம்பியனான திசர பெரேரா தலைமையிலான ஜெவ்னா கிங்ஸ் இம்முறையும் சம்பியனாகி வரலாறு படைக்க காத்திருக்கிறது.

இந்த வருடம் இறுதிப் போட்டியில் விளையாடும் இரண்டு அணிகளினதும் தலைவர்களான ஏஞ்சலோ மெத்யூஸும் திசர பெரேராவும் புனித சூசையப்பர் கல்லூரியில் 3 வருடங்கள் தொடர்ச்சியாக ஒன்றாக விளையாடியவர்கள் என்பது விசேட அம்சமாகும்.

இருவரும் சிறந்த அனுபவங்களைக் கொண்டிருப்பதாலும் ஒருவர் ஒருவரது அணுகுமுறைகளை நன்கு அறிந்திருப்பதாலும் இன்றைய இறுதிப் போட்டியில் தத்தமது அணிகளுக்கு வெற்றியை ஈட்டிக்கொடுக்க  இருவரும்   கடும் பிரயத்தனம எடுக்கவேண்டிவரும்.

முதலிரண்டு அத்தியாயங்களிலும் இறுதிப் போட்டியில் கோல் க்ளடியேட்டர்ஸ் அணியை வெற்றிகொண்டு லங்கா பிறீமியர் லீக் கிண்ணத்தை அடுத்தடுத்து சுவீகரித்த ஜெவ்னா கிங்ஸ் இம்முறை இறுதிப் போட்டியில் கலம்போ ஸ்டார்ஸ் அணியைசந்திக்கிறது.

இந்த வருடம் லீக் சுற்றில் இரண்டு தடவைகள் ஒன்றையொன்று எதிர்த்தாடிய போது முதல் போட்டியில் 6 ஓட்டங்களாலும்    2ஆவது போட்டியில் 8 விக்கெட்களாலும் ஜெவ்வான கிங்ஸ் இலகுவாக வெற்றிபெற்றிருந்தது.

ஆனால், இந்தப் போட்டி முடிவை வைத்து எந்த அணி வெற்றிபெறும் எனக் கூறமுடியாது.

எனினும் 2020, 2021 எல் பி எல் அத்தியாயங்களின் இறுதிப் போட்டிகளில் ஜெவ்னா கிங்ஸ் போராட்டக் குணத்துடன் ஈட்டிய வெற்றிகளை நோக்கும்போது அவ்வணிக்கு இந்த வருடமும் சம்பியனாகக் கூடிய வாய்ப்பு இருப்பதாகத் தென்படுகிறது.

இந்த சுற்றுப் போட்டியில் அணிகள் நிலையில் முதலாம் இடத்திலிருந்த கண்டி பெல்கன்ஸை முதலாவது தகுதிகாண் போட்டியில் டக்வேர்த் லூயிஸ் முறைமையில் 24 ஓட்டங்களால் வெற்றிகொண்டு இறுதிப் போட்டியில் விளையாட ஜெவ்னா கிங்ஸ் தகுதிபெற்றது.

இந்த இரண்டு அணிகளும் 3 எல் பி எல் அத்தியாயங்களிலும் நேருக்கு நேர் சந்தித்த 6 சந்தர்ப்பங்களில் முதல் 2 போட்டிகளில் (2020) கலம்போ (கிங்ஸ்) வெற்றிபெற்றது.

2021, 2022 அத்தியாயங்களில் தொடர்ச்சியாக 4 தடவைகள் ஜெவ்னா கிங்ஸ் வெற்றியீட்டியது.

ஜெவ்னா கிங்ஸ் அணியில் உள்ளூர் கிரிக்கெட் நட்சத்திரங்களான அவிஷ்க பெர்னாண்டோ (289 ஓட்டங்கள்), சதீர சமரவிக்ரம (250 ஓட்டங்கள்), ஆப்கானிஸ்தானின் ரஹ்மானுல்லா குர்பாஸ் (213 ஓட்டங்கள்) ஆகியோர் துடுப்பாட்டத்திலும் யாழ். வீரரும் அதிசிறந்த வளர்ந்துவரும் வீரராகத் திகழும் விஜயகாந்த் வியாஸ்காந்த் (13 விக்கெட்கள்), பினுர பெர்னாண்டோ (11 விக்கெட்கள்), ஜேம்ஸ் ஃபுல்லர் (10 விக்கெட்கள்) ஆகியோர் பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்பட்டுள்ளனர்.

இவர்களுடன் திசர பெரேரா, ஷொயெப் மாலிக், இளம் வீரர் துனித் வெல்லாலகே, மஹீஷ் தீக்ஷன, தனஞ்சய டி சில்வா ஆகியோரும் அணியின் வெற்றிக்காக கடுமையாக முயற்சிக்கவுள்ளனர்.

இதேவேளை, இந்த வருடம் லீக் சுற்றில் பெரிய அளவில் பிரகாசிக்காத போதிலும் நீக்கல் போட்டியில் கோல் க்ளடியெட்டர்ஸையும் 2ஆவது தகுதிகாண் போட்டியில் கண்டி பெல்கன்ஸையும் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள கலம்போ கிங்ஸ் முதல் தடவையாக சம்பியனாவதற்கு முயற்சிக்கவுள்ளது.

உள்ளூர் வீரர்களில் பெரிதும் தங்கியருக்கும் கலம்போ கிங்ஸ் அணியில் தினேஷ் சந்திமால் (238 ஓட்டங்கள்), சரித் அசலன்க (211 ஓட்டங்கள்), ஏஞ்சலோ மெத்யூஸ் (201 ஓட்டங்கள், ரவி பொப்பாரா (198 ஓட்டங்கள்) ஆகியோர் துடுப்பாட்டத்திலும் கசுன் ராஜித்த (12 விக்கெட்கள்), டொமினிக் ட்ரேக்ஸ் (7 விக்கெட்கள்), ஜெவ்றி வெண்டர்சே, சுரங்க லக்மால், நவீன் உல் ஹக், பெனி ஹவெல் (நால்வரும் தலா 5 விக்கெட்கள்) ஆகியோர் பந்துவீச்சிலும் திறமையாக செயற்பட்டுள்ளனர்.

இரண்டு அணிகளிலும்   விரர்களின் ஆற்றல்களை நோக்கும்போது ஜெவ்னா கிங்ஸ் சற்று பலம் வாய்ந்த அணியாகத் தென்படுகின்ற போதிலும் கலம்போ கிங்ஸ் அணியைக் குறைத்து மதிப்பிட முடியாது.

எனவே இன்றைய இறுதிப் போட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.

6 கோடி ரூபா பணப்பரிசு

இந்த வருடம் எல்பிஎல் கிரிக்கெட் போட்டியில் 6 கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட பணப்பரிசு வழங்கப்படவுள்ளது. இது கடந்த வருடத்தைவிட ஒன்றரை கோடி ரூபாவுக்கு சற்று அதிகமானது.

சம்பியனாகும் அணிக்கு எல்பிஎல் வெற்றிக் கிண்ணத்துடன் 3 கோடியே 60 இலட்சம் ரூபாவும் இரண்டாம் இடத்தைப் பெறும் அணிக்கு ஒரு கோடியே 80 இலட்சம் ரூபாவும் பணப்பரிசாக வழங்கப்படவுள்ளது.

இந்தப் பிரதான பணப் பரிசுகளை விட இறுதி ஆட்டநாயகன், அதிசிறந்த வளர்ந்து வரும் வீரர், அதிக ஓட்டங்கள் பெற்றவர், அதிக விக்கெட்களை வீழ்த்தியர், நேர்த்தியான விளையாட்டு போன்ற விருதுகளுடன் பணப்பரிசுகளும் வழங்கப்படவுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலகக் கிண்ணத்திற்கான இலங்கை குழாம் அறிவிப்பு

2023-09-26 11:18:45
news-image

ஆசிய விளையாட்டு விழா : கிரிக்கெட்டில்...

2023-09-25 15:20:39
news-image

ஆசிய ஒலிம்பிக் பேரவை கொடியின் கீழ்...

2023-09-25 11:40:58
news-image

உலகக் கிண்ண அணியில் ஹசரங்க, சமீர...

2023-09-25 10:49:38
news-image

வெளிமாவட்ட பெண்கள் பாடசாலைகளில் 3ஆம் இடம்பெற்று...

2023-09-25 10:30:29
news-image

மெக்ஸ்வெல் 2010இல் முன்வைத்த யோசனைக்கு அமைய...

2023-09-25 10:46:37
news-image

கில், ஐயர், யாதவ் துடுப்பாட்டத்தில் அசத்தல்,...

2023-09-25 09:54:57
news-image

ஆசிய விளையாட்டு விழாவில் இலங்கைக்கு தங்கம்...

2023-09-25 07:01:59
news-image

ஆசிய விளையாட்டு விழாவை சீன ஜனாதிபதி...

2023-09-24 06:49:46
news-image

ஷமி 5 விக்கெட் குவியல், நால்வர்...

2023-09-23 10:53:17
news-image

19ஆவது ஆசிய விளையாட்டு விழா சினாவின்...

2023-09-23 10:25:11
news-image

அருணாச்சலப் பிரதேச வீராங்கனைகளுக்கு சீனா விசா...

2023-09-23 09:42:09