அரசாங்கம் வரவு செலவுத்திட்டத்தை நிறைவேற்றிக்கொள்வதில் பாரிய நெருக்கடிகளைச் சந்தித்தது. எனவே பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இலஞ்சம் வழங்கியே வரவு செலவுத்திட்டம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டதாக கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று பொரளையிலுள்ள என்.எம்.பெரேரா நிலையத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.