கண்டி பெல்கன்ஸை வீழ்த்தி ஜெவ்னா கிங்ஸை இறுதியில் சந்திக்கிறது கலம்போ ஸ்டார்ஸ்

23 Dec, 2022 | 07:03 AM
image

(நெவில் அன்தனி)

கண்டி பெல்கன்ஸ் அணிக்கு எதிராக கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (22) இரவு நடைபெற்ற 2 ஆவது லங்கா பிறீமியர் லீக் தகுதிகாண் போட்டியில் 6 விக்கெட்களால் வெற்றியீட்டிய கலம்போ ஸ்டார்ஸ் அணி, வெள்ளிக்கிழமை (23) நடைபெறவுள்ள எல்பிஎல் இறுதிப் போட்டியில் ஜெவ்னா கிங்ஸ் அணியை எதிர்த்தாடவுள்ளது.

கண்டி பெல்கன்ஸ் அணியினால் நிர்ணயிக்கப்பட்ட 169 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கலம்போ ஸ்டார்ஸ் அணி 18.5 ஓவர்களில் 4 விக்கெட்களை மாத்திரம் இழந்து 169  ஓட்டங்களைப்  பெற்று 6 விக்கெட்களால் அமோக வெற்றியீட்டியது.

லீக் சுற்றில் கண்டி பெல்கன்ஸிடம் லீக் ஒரே விதமாக 9 விக்கெட்களால் இரண்டு தடவைகள் அடைந்த   கலம்போ ஸ்டார்ஸ்   இந்த வெற்றி மூலம் நிவர்த்தி செய்துகொண்டது.

இப் போட்டியில் வனிந்து ஹசரங்க ஆட்டமிழக்காமல் 77 ஓட்டங்கள் குவித்து கண்டி பெல்கன்ஸ் அணியைப் பலப்படுத்தியபோதிலும் அவரது முயற்சி இறுதியில் வீண்போனது.

கலம்போ ஸ்டார்ஸின் வெற்றியில் கசுன் ராஜித்தவின் சிறப்பான பந்துவீச்சு, சரித் அசலன்க, தினேஷ் சந்திமால், ரவி பொப்பாரா, அணித் தலைவர் ஏஞ்சலோ மெத்யூஸ் ஆகியோரின் துடுப்பாட்டங்கள் என்பன முக்கிய பங்ககாற்றின.

ஆரம்ப வீரர் நிஷான் மதுஷ்க 11 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தபோது மொத்த எண்ணிக்கை 13 ஓட்டங்களாக இருந்தது.

இந் நிலையில் தினேஷ் சந்திமாலும் சரித் அசலன்கவும் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 63 பந்துகளில் 90 ஓட்டங்களைப் பகிர்ந்து  கலம்போ ஸ்டார்ஸ்   அணிக்கு தெம்பூட்டினர்.

ஆனால், அவர்கள் இருவரும் டொமினிக் ட்ரேக்ஸும் 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டமிழந்தனர்.

தினேஷ் சந்திமால் 38 ஓட்டங்களையும் சரித் அசலன்க 40 பந்துகளில் 7 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 64 ஓட்டங்களையும் பெற்றனர். டொமினிக் ட்ரேக்ஸ் 2 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். (124 - 3 விக்.)

எனினும் ரவி பொப்பாராவும் அணித் தலைவர் ஏஞ்சலோ மெத்யூஸும் பிரிக்கப்படாத 5ஆவது விக்கெட்டில் 25 பந்துகளில் 45 ஓட்டங்களைப் பகிர்ந்து கலம்போ ஸ்டார்ஸ் அணியின் வெற்றியை உறுதிசெய்தனர்.

ரவி பொப்பாரா 16 பந்துகளில் 29 ஓட்டங்களுடனும் ஏஞ்சலோ மெத்யூஸ் 13 புந்துகளில் 21 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

கண்டி பெல்கன்ஸ் பந்துவீச்சில் கமிந்து மெண்டிஸ் 26 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

முன்னதாக முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட கண்டி பெல்கன்ஸ் 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 168 ஓட்டங்களைக் குவித்தது.

முதலாவது ஓவரிலேயே பெத்தும் நிஸ்ஸன்க (2), கண்டி பெல்கன்ஸின் தடுப்பாட்ட நட்சத்திரம் அண்ட்றே ப்ளெச்சர் (0) ஆகிய இருவரும் ஆட்டமிழக்க கண்டி பெல்கன்ஸ் ஆட்டம் கண்டது.

ஆனால், கமிந்து மெண்டிஸ் (23), அஷேன் பண்டார ஆகிய இருவரும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 3ஆவது விக்கெட்டில் 38 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை சரிவிலிருந்து மீட்டனர்.

தொடர்ந்து அஷேன் பண்டாரவும் அணித் தலைவர் வனிந்து ஹசரங்க டி சில்வாவும் 4ஆவது விக்கெட்டில் 55 பந்துகளில் 92 பெறுமதிமிக்க ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினர்.

அஷேன் பண்டார 40 ஓட்டங்களைப் பெற்றதுடன் வனிந்து ஹசரங்க 34 பந்துகளை மாத்திரம் எதிர்கொண்டு 8 பவுண்டறிகள், 3 சிக்ஸ்கள் உட்பட ஆட்டமிழக்காமல் 77 ஓட்டங்களைக் குவித்தார்.

பின்வரிசையில் கார்லோஸ் ப்றத்வெய்ட் ஆட்டமிழக்காமல் 15 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் கசுன் ராஜித்த 20 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மென்செஸ்டர் சிட்டி எவ்.ஏ. கிண்ண சம்பியனானது!

2023-06-04 17:17:41
news-image

இரண்டாவது போட்டியில் இலங்கை 323 ஓட்டங்கள்...

2023-06-04 16:10:20
news-image

ஆசிய கிண்ணப் போட்டிகளை இலங்கை நடத்த...

2023-06-04 11:43:17
news-image

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மல்யுத்தவீராங்கனைகள் -கபில் தேவ்...

2023-06-03 13:50:22
news-image

தோனியின் முழங்கால் சத்திர சிகிச்சை வெற்றிகரமாக...

2023-06-03 10:43:52
news-image

ஆப்கானிஸ்தானிடம் 6 விக்கெட்களால் பணிந்தது இலங்கை

2023-06-02 20:48:55
news-image

ஆப்கானிஸ்தானுக்கு வெற்றி இலக்கு 269 ஓட்டங்கள்...

2023-06-02 14:31:46
news-image

 ஜோகோவிச்சின் கொசோவா தொடர்பான கருத்து ஏற்படுத்திய...

2023-06-02 13:22:32
news-image

ஐ.பி.எல்லில் அசத்திய மதீஷ பத்திரணவை சர்வதேச...

2023-06-02 07:25:11
news-image

மதீஷ பத்திரண குறித்து இலங்கை அணித்...

2023-06-02 12:32:24
news-image

23 வயதுக்குட்பட்ட பொதுநலவாய பளுதூக்கல் சம்பியன்ஷிப்பில்...

2023-06-01 17:19:41
news-image

47ஆவது தேசிய கூடைப்பந்தாட்டம்: இருபாலாரிலும் வட...

2023-06-01 15:51:26