கூட்டு எதிரணியின் உறுப்பினர்கள் சிலருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.

அவருக்கெதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாட்டினை தெரிவித்துள்ளமையால் குறித்த நஷ்டஈட்டினை கோரவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்று (14) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கூட்டு எதிரணியினரின் முறைப்பாட்டுக்கு எதிராக நீதிமன்றத்தில் மனுவொன்றை சமர்ப்பித்து நஷ்டஈடு கோரவுள்ளேன்.

பொய்யான மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை கூட்டு எதிரணியினர் சுமத்துவது வழமையாகியுள்ளது.

இதற்கு நீதியானதும் விரைவானதுமான விசாரணைகளை முன்னெடுப்பர் அவசியமாகும் என்றார். 

 கூட்டு எதிரணியின் உறுப்பினர்கள் சிலர் வெளிநாட்டில் தொழில் புரியும் இலங்கையர்களுக்கான காப்பீட்டு திட்டத்தில் முறைகேடு இருப்பதாக  இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சருக்கு எதிராக முறைப்பாடொன்றை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.