கட்டாக்காலி கால்நடைகளை கட்டுப்படுத்த பொது இடங்களில் குப்பை கொட்டுவதை தடுக்க விசேட நடவடிக்கைகள்

Published By: Vishnu

22 Dec, 2022 | 06:50 PM
image

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கட்டாக்காலி கால்நடைகளை கட்டுப்படுத்தவும் பொது இடங்களில் குப்பை கொட்டுவதை தடுக்கவும் விசேட நடவடிக்கைகள் மேற்கொள்ளவுள்ளதாக கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் காமலநாதன் விஜிந்தன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மேலும் தெரியவருகையில்

கரைதுறைப்பற்று பிரதேச சபை விசேட அமர்வு இன்று (22) இடம்பெற்றது இதன்போது சபையில் தவிசாளர் அவர்களால் கட்டாக்காலி கால்நடைகளை கட்டுப்படுத்தவில்லை என பிரதேச சபை மீது பல்வேறு தரப்பினரும் குற்றம் சுமத்துகின்றனர்.

இந்த நிலையில் கட்டாக்காலி கால்நடைகளை கட்டுப்படுத்த விசேட நடவடிக்கைகள் மேற்கொள்ளவுள்ளதாகவும் இதனடிப்படையில் கட்டாக்காலி கால்நடைகள் பிடிக்கப்படும் போது தண்டப்பணங்களை அதிகரிக்கும் யோசனை முன்வைக்கப்பட்டது

அதனடிப்படையில் முதலாவது தடவை பிடிபடும் போது தண்டப்பணம் ஐந்தாயிரம் ரூபாவும் இரண்டாவது தடவையாக பிடிபடும் போது ஏழாயிரத்து ஐநூறு ரூபாவும் மூன்றாவது முறையாக பிடிபடும் போது பத்தாயிரம் ரூபாயும் நான்காவது தடவையாக பிடிபடும் போது சட்டத்தின் படி ஏலவிற்பனை செய்வது என்று யோசனை முன்வைக்கப்பட்டது.

இதனை சபை ஏகமனதாக ஏற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு விரைவாக கால்நடைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பொது இடங்களில் குப்பை கொட்டுவதை தடுக்கும் முகமாக பொது இடங்களில் குப்பை கொட்டுவதை ஆதாரங்களுடன் காட்டி தருபவர்களுக்கு அறவிடும் தண்டப்பணத்தில் 75 வீதத்தை சன்மானமாக வழங்க ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

இதனடிப்படையில் வரும் 2023 ஐனவரி முதலாம் திகதி முதல் இந்த விடயங்கள் நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்வதாக தவிசாளர் கமலநாதன் விஜிந்தன் தெரிவித்துள்ளார்.

சபை அமர்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தவிசாளர் எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் அதிகரித்த கட்டணங்கள் அறவிடப்படும் எனவும் கட்டணங்களை அதிகரித்து மக்களை துன்பப்படுத்தவில்லை மாறாக தண்டப்பணம் அதிகம் என்பதை உணர்ந்து பண்ணையாளர்கள் கால்நடைகளை பராமரிக்க வேண்டும் எனவும் இதனூடாக கட்டாக்காலி கால்நடைகளை கட்டுப்படுத்த முடியும் என்று நம்புவதாக தெரிவித்தார்.

அத்தோடு பொது இடங்களில் குப்பை கொட்டுவதை தடுக்கும் வகையில் குப்பை கொட்டுவதை ஆதாரங்களுடன் காட்டி தருபவர்களுக்கு தண்டப்பணத்தின் 75 வீதத்தை சன்மானமாக வழங்கி இதனூடாக பொது இடங்களில் குப்பை கொட்டுவதை தடுக்கும் செயற்பாடுகளை தடுக்கவும் தாகவும் தெரியவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் உள்ளுராட்சிமன்றத் தேர்தல்களை...

2024-09-07 18:28:56
news-image

ஜனாதிபதித் தேர்தலில் ரணில் வெற்றிபெற்று தமிழர்களின்...

2024-09-07 22:59:45
news-image

அநுர கூறுவதைப் போன்று சிங்கள மக்களின் ...

2024-09-07 18:22:22
news-image

மாகாண சபை முறைமையை மீண்டும் பலப்படுத்தி...

2024-09-07 22:26:01
news-image

எதிர்வரும் பாராளுமன்றத்தேர்தலில் போட்டியிடேன் - பா.அரியநேத்திரன்

2024-09-07 14:22:14
news-image

கடந்து வந்த பாதையை ஜனாதிபதி மறந்துவிட்டார்...

2024-09-07 18:17:06
news-image

தமிழ்த் தேசிய நிலைப்பாட்டின் அடிப்படையில் தமிழ்...

2024-09-07 17:30:15
news-image

கருத்துச் சுதந்திரம் பாதிப்பற்ற வகையில் கண்காணிக்கப்பட...

2024-09-07 18:12:30
news-image

சிலாபம் - புத்தளம் வீதியில் விபத்து;...

2024-09-07 18:25:56
news-image

ராஜபக்சர்கள் சீரழித்த நாட்டை மீண்டும் ரணில்,...

2024-09-07 21:53:36
news-image

கல்முனையில் யானையால் தாக்கப்பட்டு யாசகர் பலி

2024-09-07 17:57:54
news-image

பொத்துவில் பகுதியில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர்...

2024-09-07 17:35:27