உணவுப் பாதுகாப்பு வேலைத்திட்டம் அரசியல் சார்பற்றது - மகிந்த அமரவீர 

Published By: Digital Desk 2

22 Dec, 2022 | 06:44 PM
image

விவசாயிகளுக்கு தேவையான வசதிகள் செய்துகொடுக்கப்படும். அதேபோல நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி விவசாயத்தில் ஈடுபடுவதற்கான வழிகாட்டல்களும் வழங்கப்படும் என்று விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

நுவரெலியா நகர மண்டபத்தில் வியாழக்கிழமை (டிச. 22) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்ற நுவரெலியா மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மாவட்ட அபிவிருத்தி திட்டம் தொடர்பாக அரச அதிகாரிகள் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

"விவசாய திணைக்களத்தின் கீழ் உள்ள பயிரிடக்கூடிய இடயங்களை, உற்பத்திக்கு வழங்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

உரப்பிரச்சினையும் தீர்க்கப்பட்டுவருகின்றது. களைக்கொல்லி உள்ளிட்டவையும் வழங்கப்படும். அதாவது விவசாயிகளுக்கு தேவையான சகல வசதிகளும் செய்துகொடுக்கப்படும்.

அரிசியில் போன்று மரக்கறி உள்ளிட்டவற்றிலும் நாம் தன்னிறைவு அடைய வேண்டும். உணவு பாதுகாப்பு வேலைத்திட்டம் அரசியல் சார்பற்றது.

அதனை அனைவரும் பொறுப்பேற்கலாம். அதேவேளை, கால்நடை வளர்ப்பு மற்றும் தேசிய பால் உற்பத்தி சம்பந்தமாகவும் கவனம் செலுத்தப்பட்டு, அவற்றின் அபிவிருத்திக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மின்சாரம் தாக்கி ஒருவர் பலி!

2026-04-12 07:48:35
news-image

நபர் ஒருவர் கொலை: சந்தேகநபர் கைது!

2026-04-12 07:38:37
news-image

பூஸா சிறைச்சாலையிலிருந்த 07 முக்கிய பாதாள...

2026-04-12 07:19:46
news-image

நிலக்கரி இறக்குமதி முறைகேடு குறித்த விசாரணை:...

2026-04-12 06:28:35
news-image

இன்றைய வானிலை : சூரியன் உச்சம்...

2026-04-12 06:23:51
news-image

தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகளை அளவீடு...

2026-04-11 17:27:25
news-image

மார்ச் மாதத்தில் வெளிநாட்டுப் பணியாளர்களால் இலங்கைக்கு...

2026-04-11 17:08:17
news-image

தையிட்டி காணி விடுவிப்பு தொடர்பான கலந்துரையாடல்!

2026-04-11 17:35:29
news-image

மேற்காசியாவில் தற்காலிக போர்நிறுத்தம் : இலங்கை...

2026-04-11 15:36:16
news-image

உரம் குறித்து விவசாயிகள் அச்சமடையத் தேவையில்லை...

2026-04-11 14:59:19
news-image

சுகாதார சேவையை வலுப்படுத்த 154 பேருக்கு...

2026-04-11 14:24:49
news-image

சட்டவிரோத சிகரெட்டுகளுடன் சீன நாட்டவர் கட்டுநாயக்கவில்...

2026-04-11 14:28:17