(இராஜதுரை ஹஷான்)
நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் காணி பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு சகல அரச நிறுவனங்களையும் ஒருமுகப்படுத்தி தயாரிக்கப்படும் அறிக்கையை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டும். இல்லாவிட்டால் தனக்கு உரித்தாக்கப்பட்டுள்ள அதிகாரத்தை கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கையை முன்னெடுப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொறுப்பான அதிகாரிகளிடம் குறிப்பிட்டார்.
பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள காணி அனுமதி பத்திரங்கள் அனைத்தையும் இரத்து செய்து மக்களுக்கு தேவையான காணிகளை வழங்க நடவடிக்கை எடுப்பேன்.
ஒருசில அரச சேவையாளர்கள் உக்ரைன் -ரஷ்யா போன்று செயற்படுகிறார்கள்.மக்களுக்கான சேவையை இழுபறி நிலையில் முன்னெடுக்காமல் பொறுப்புடன் முன்னெடுக்குமாறும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.
நுவரெலியா மாவட்ட செயலக பிரிவில் வியாழக்கிழமை (டிச. 22) இடம்பெற்ற நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
நாட்டு மக்கள் என்னிடம் (ஜனாதிபதி) முன்வைத்துள்ள பல்வேறு பிரச்சினைகளில் 50 சதவீதமானவற்றை அரச சேவையாளர்களினால் தீர்க்க முடியும். பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஜனாதிபதி,அமைச்சர் ஆகியோர் கொழும்பில் இருந்து ஒவ்வொரு பிரதேசங்களுக்கு செல்ல வேண்டிய தேவை கிடையாது,அரச நிறுவனங்கள் விரிவுப்படுத்தப்பட்ட தொடர்புகள் ஊடபக மக்கள் சேவையை சிறந்த முறையில் தொடர முடியும் என்றார்.
நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் காணி பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு சகல அரச நிறுவனங்களையும் ஒருமுகப்படுத்தி தயாரிக்கப்படும் அறிக்கையை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 04ஆம் திகதிக்கு முன்னர் தனக்கு அனுப்பி வைக்கமாறு ஜனாதிபதி பொறுப்பான அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
அவ்வாறு அறிக்கையை சமர்ப்பிக்காவிட்டால் தனக்கு உரித்தாக்கப்பட்டுள்ள அதிகாரத்தை கொண்டு அடுத்தக்கட்ட நடவடிக்கையை முன்னெடுப்பதாக ஜனாதிபதி அதிகாரிகளிடம் குறிப்பிட்டார்.
நுவரெலியா மாவட்டத்தில் சுற்றுலா சேவைத்துறையை விரிவுப்படுத்துவது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது. உலக முடிவை பார்வையிடுவதற்கு சுற்றுலா பயணிகளுக்காக பட்டிபொல முதல் பொரலந்த வரையான பகுதியில் கேபிள் கார் செயற்திட்டத்தை ஆரம்பிக்க உரிய நடவடிக்கைளை விரைவாக முன்னெடுக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.
ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டதாவது,
நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் காணி பிரச்சினைக்கு விரைவாக தீர்வு காண வேண்டும். அரசுக்கு சொந்தமான காணி தொடர்பில் மாவட்ட செயலகம், பெருந்தோட்டத்துறை அமைச்சு, காணி பதிவு திணைக்களம் ஆகியவற்றை ஒன்றிணைந்து ஒரு மாத காலத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்கமாறு பணிக்கப்பட்டுள்ளது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM