கொரோனா முன்னெச்சரிக்கை : மீண்டும் முகக்கவசத்தை அணியுமாறு இந்திய அரசு அறிவுறுத்தல்

Published By: Digital Desk 2

22 Dec, 2022 | 04:39 PM
image

கொரோனா பரவலை தடுப்பதற்கு பொதுமக்கள் முகக்கவசம் அணியுமாறு வியாழக்கிழமை (டிச. 22) இந்திய மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

சீனாவில் தற்போது கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதற்கு காரணம், ஒமைக்ரோனின் பிஎப்.7 துணை வைரஸ்கள் என நிபுணர்கள் கணித்துள்ளனர். இந்த வைரஸ் பிஏ.5.2.1.7 வைரஸ் போன்றுதான் என கூறப்படுகிறது. 

அதிவேகமாக பரவுகிற தன்மையைக் கொண்டுள்ள இந்த வைரஸ், சீனாவில் மட்டுமின்றி அமெரிக்கா, பிரித்தானியா, பெல்ஜியம், ஜெர்மனி, பிரான்ஸ், டென்மார்க் ஆகிய நாடுகளிலும் பரவியு்ள்ளது. 

பிஎப்.7 வைரஸ், இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் கடந்த அக்டோபர் மாதமளவில் இருவருக்கு இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதை குஜராத் உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் கண்டறிந்துள்ளது. 

ஒடிசாவிலும் அந்த வைரஸ் ஒருவருக்கு பாதித்துள்ளது. இந்தியாவில் இதுவரை 3 பேரை இந்த வைரஸ் பாதித்துள்ளதாக அதிகார வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த நிலையில், இன்று (டிச. 22) பாராளுமன்றத்தில் இதுகுறித்து பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சூக் மாண்டவியா கூறியதாவது,

கொரோனா பரவலை தடுக்க முகக்கவசம் அணியுமாறு மக்களுக்கு மாநில அரசுகள் அறிவுறுத்த வேண்டும். கூட்டம் அதிகம் உள்ள இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிய வேண்டும்.

புதிய வகை கொரோனா பரவலை தீவ்ரமாக கண்காணித்து வருகிறோம். புதிய கொரோனா வகையை கண்டறிய சோதனைகள் நடைபெற்று வருகிறது. இந்தியாவில் கொரோனா தொற்று விகிதம் குறைந்து வருகிறது.சீனா கொரோனா பரவல் நிலவரத்தை இந்தியா கவனித்து வருகிறது. என தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியாவில் போர் விமானம் விபத்து ;...

2026-03-06 15:44:35
news-image

போரில் 30க்கும் மேற்பட்ட ஈரான் கப்பல்கள்...

2026-03-06 15:26:57
news-image

ஈரானின் புதிய உயர் தலைவராக மொஜ்தபா...

2026-03-06 12:14:38
news-image

ஈரானில் இரண்டு ஜப்பானியர்கள் தடுத்து வைப்பு...

2026-03-06 11:43:19
news-image

புதிய டெஸ்ட்ராயரை ஆய்வு செய்த கிம்...

2026-03-06 10:41:35
news-image

"ஆயுதங்களைக் கீழே போடுங்கள்; இல்லையேல் மரணம்...

2026-03-06 09:35:51
news-image

குவைத் நகரில் உள்ள அமெரிக்க தூதரக...

2026-03-06 07:56:48
news-image

ட்ரம்ப் விதித்த வரிகள் இரத்து -...

2026-03-06 07:45:39
news-image

சவூதி அரேபியாவை தாக்குவதை ஈரான் தவிர்க்க...

2026-03-06 06:34:06
news-image

மத்திய கிழக்கில் அச்சுறுத்தல்கள்: WHO துபாய்...

2026-03-06 06:21:43
news-image

இஸ்ரேலின் தாக்குதலால் லெபனானில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை...

2026-03-06 06:14:47
news-image

2026 – 2030 ஐந்தாண்டுத் திட்டம்...

2026-03-05 17:13:15