அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சரின் சீன விஜயம் ; இரு நாடுகளிற்கும் இடையில் பல விடயங்கள் தொடர்பில் இணக்கப்பாடு

Published By: Rajeeban

22 Dec, 2022 | 01:41 PM
image

அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பெனி வொங்கின் சீன விஜயத்தை தொடர்ந்து இரு நாடுகளிற்கும் இடையில் பல விடயங்கள் தொடர்பில் இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது.

வர்த்தக தடைகள் உட்பட பல முக்கிய விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தைகளை மீள ஆரம்பிப்பது என அவுஸ்திரேலியாவும் சீனாவும் இணங்கியுள்ளன.

அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சரின் சீன விஜயத்தை தொடர்ந்தே இந்த இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது.

சீன வெளிவிவகார அமைச்சரை சந்தி;த்த பின்னர் கருத்து வெளியிட்டுள்ள அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர்  உறவுகளை ஸ்திரப்படுத்துவதை நோக்கி இரு நாடுகளும் முக்கியமான நடவடிக்கைகளை எடுத்துள்ளன எனகுறிப்பிட்டுள்ளார்.

வர்த்தகம் துணைதூதரகங்கள் காலநிலை மாற்றம் மற்றும் பாதுகாப்பு தொடர்பில் பேச்சுவார்த்தைகளை மீள ஆரம்பிப்பதற்கு இரு நாடுகளும் இணங்கியுள்ளன.

இரு நாடுகளும் ஸ்திரமான உறவை ஏற்படுத்திக்கொள்வது தொடர்பில் செயற்படுகின்றன என அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளும் தங்கள் கருத்துவேறுபாடுகளை புத்திசாலித்தனமாக கையாண்டால் நாங்கள் எங்கள் இரு தரப்பு உறவுகளை மேலும் வளர்க்கலாம் தேசிய நலன்களை பேணலாம் என்ற கருத்தை நான் மீண்டும் வலியுறுத்துகின்றேன் எனவும் பெனிவொங் தெரிவித்துள்ளார்.

சீனா பரஸ்பர மரியாதை சமத்துவம் பரஸ்பர நன்மை கருத்துவேறுபாடுகளை புத்திசாலித்தனமாக கையாள்தல் ஆகியவற்றை அடிப்படையாக கொண்ட உறவுக்கு ஒப்புக்கொண்டது எனவும் அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17