செயற்கை கருப்பை மூலம் ஆண்டுக்கு 30,000 குழந்தைகள் சாத்தியம் ; எக்டோலைப் நிறுவனம்

Published By: Digital Desk 2

22 Dec, 2022 | 12:33 PM
image

பெண்களின் கருவறை போலவே செயற்கையாக உருவாக்கப்படும் கருப்பை வசதி மூலம் வருடத்திற்கு 30,000 குழந்தைகள் வரை பிறக்கவைக்க முடியும் என்று எக்டோ லைப் (EctoLife) என்ற தனியார் நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. 

இதுதான் உலகில் செயற்கையாக உருவாக்கப்பட்ட முதல் கருவறை நிறுவனம் என்றும் கூறப்படுகிறது.

எக்டோலைப் (Ecto Life) நிறுவனம் பெர்லினை தலைமையகமாகக் கொண்ட உயிரி தொழில்நுட்பவியல் நிறுவனம். இந்த நிறுவனம்தான் உலகின் முதல் செயற்கை கருப்பை முறையில் குழந்தையை உருவாக்கும் முறையை அறிமுகப்படுத்துகிறது. 

பெண்களின் கருப்பை போலவே செயற்கையாக உருவாக்கப்படும் கருப்பை பெட்டிகள் மூலம் வருடத்திற்கு 30,000 குழந்தைகளை உருவாக்க முடியும் என்று இந்த நிறுவனம் கூறுகிறது. 

இதில் உள்ள ஒவ்வொரு செயற்கை கருப்பை பெட்டிகளும் குழந்தையின் இதயத் துடிப்பு, வெப்பநிலை, இரத்த அழுத்தம், சுவாசம் உள்ளிட்ட முக்கிய உயிர்காக்கும் அம்சங்களை கண்காணிக்கும் சென்சார்களை கொண்டுள்ளன. இது தொடர்பான வீடியோவையும் எக்டோலைப் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

மக்கள் தொகை தொடர்ந்து குறைந்து கொண்டிருக்கும் ஜப்பான், பல்கேரியா மற்றும் தென் கொரியா நாடுகளுக்கு இது பெரிதும் உதவும் என்றும், புற்றுநோய் மற்றும் பிற உடல் சிக்கல்களால் கருப்பையை இழக்கும் பெண்களுக்கு செயற்கை முறையில் குழந்தை உருவாக்கும் முறை ஒரு தீர்வாக அமையும் என்றும் எக்டோ லைப் தெரிவிக்கிறது.

வாடகைத் தாய், செயற்கை கருவூட்டல் தற்போது வியாபார மயமாகியுள்ள சூழலில் எக்டோ லைப்பின் இந்த அறிவிப்பு சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. எனினும் இது எதிர்காலத்தில் நிச்சயம் சாத்தியமாகும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சட்ஜிபிடி போன்ற எழுதும் கருவிகளே கற்றலின்...

2023-03-27 10:17:06
news-image

கொலம்பியாவில் பணயக் கைதிகளாக தடுத்துவைக்கப்பட்டிருந்த 78...

2023-03-06 11:27:05
news-image

போலி ChatGPT செயலி குறித்து வல்லுநர்கள்...

2023-02-24 12:52:35
news-image

அதிமுக பொதுக்குழு வழக்கு – உச்சநீதிமன்றம்...

2023-02-23 11:30:56
news-image

இனி நாமும் பெறலாம் ‘ப்ளூ டிக்’

2023-02-22 17:52:27
news-image

பேஸ்புக், இன்ஸ்டாவில் ப்ளூ டிக் பெற...

2023-02-20 09:54:23
news-image

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் போட்டி

2023-02-08 13:05:35
news-image

இலங்கை உட்பட ஏனைய நாடுகளில் அதிக...

2023-02-01 12:29:55
news-image

சீனா கொவிட் - பிரபலங்கள் மரணம்...

2023-01-06 13:10:35
news-image

பல நாடுகளில் டுவிட்டர் முடங்கியதாக தகவல்

2022-12-29 11:55:05
news-image

டிசம்பர் 31க்கு பின் 49 ஸ்மார்ட்போன்களில்...

2022-12-28 15:20:12
news-image

வயர்லெஸ் இயர்பட்களை வாங்குவதற்கான ஆலோசனைகள்

2022-12-24 15:54:44