சீனாவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், இது தொடர்பாக கவலை தெரிவித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதோனம் கேப்ரயஸ், சீனா தடுப்பூசிகள் செலுத்துவதை அதிகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது,
இதுதொடா்பாக ஜெனீவாவில் புதன்கிழமை (டிச. 21) நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் உலக சுகாதார அமைப்பின் தலைவா் டெட்ரோஸ் அதோனோம் கூறியதாவது:
”சீனா முழுவதும் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் சூழலில், விரிவான கள நிலைவரத்தை அறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதற்கு அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகள் மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளவா்கள் தொடா்பான கூடுதல் தகவல்கள் தேவைப்படுகின்றன. சீனாவின் நிலைவரம் குறித்து உலக சுகாதார அமைப்பு மிகுந்த கவலை கொள்கிறது.
உலக அளவில் கொரோனா தொற்று உச்சத்திலிருந்த நிலையிலிருந்து கொரோனா உயிரிழப்புகளின் எண்ணிக்கை 90 சதவீதத்துக்கும் மேல் தற்போது குறைந்துள்ளபோதும், கொரோனா பாதிப்பு முடிவுக்கு வந்துவிட்டது என்று தீா்மானம் செய்யமுடியாத வகையில் நிலையற்ற தன்மை நீடித்து வருகிறது.
சீனாவில் தற்போது நிலவி வரும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதில் உலக நாடுகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என சில விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனா் என்று அவா் கவலை தெரிவித்தாா்.
மேலும் நாட்டில் கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்த வேண்டும். தடுப்பூசி செலுத்துவதில் சீனா கவனம் செலுத்த வேண்டும். சீனாவுக்கு தேவையான உதவிகளை செய்ய உலக சுகாதார நிறுவனம் தயாராக உள்ளது" என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM