றக்பி வீரர் வசீம் தாஜூதீன் வழக்கு தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க மற்றும் நாராஹேன்பிட்ட  குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரி சுமித் பெரேரா ஆகியோரை எதிர்வரும் 26 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு விசாரணை இன்று (14) கொழும்பு நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

றக்பி வீரர் வசீம் தாஜூடின் கொலை வழக்கில் அனுர சேனாநாயக்க மற்றும் நாராஹேன்பிட்ட குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரி சுமித் பெரேரா ஆகியோர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.