வளர்ந்து வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையுடன் உறுதியாக தடம் பதித்துள்ள வீடுகளுக்கு பொருட்கள் விநியோகங்களை மேற்கொள்ளும் சேவையான Direct2Door, கொழும்பு மற்றும் கொழும்பை அண்மித்து வசிக்கும் அனைவரையும் தனது சேவைகளை அனுபவித்து பயன்பெறுமாறு அழைப்புவிடுத்துள்ளது.

வீடுகளுக்காக விநியோக சேவைகளை மேற்கொள்வது மட்டுமின்றி வாடிக்கையாளர்களின் தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்வதை உறுதி செய்யும் வகையில் பயிற்சிகளையும் பெற்றுள்ளனர்.

இதற்கமைய, புதிய Direct2Door வாடிக்கையாளர்களுக்கு தாம் பெற்றுக்கொள்ளும் முதல் மூன்று சேவைகளுக்கும் கட்டணத்தில் 250 ரூபா சலுகையை பெற்றுக்கொடுக்க Direct2Door முன்வந்துள்ளது. மேலும், ஏற்கனவே காணப்படும் வாடிக்கையாளர்கள், அதிகளவு நண்பர்களுக்கு இந்த சேவையை பரிந்துரைப்பதன் மூலம் மேலதிக விலைக்கழிவுகளையும் ஆச்சரியமூட்டும் பரிசுகளையும் பெற்றுக்கொள்ள முடியும்.

மேலும் மரக்கறி வகைகள் கொள்வனவுகளின் போது 10 வீத விலைக்கழிவு சகல வாடிக்கையாளர்களுக்கும் வழங்கப்படுகிறது. இந்த சலுகை தொடர்ந்து சகல வாடிக்கையாளர்களுக்கும் வழங்கப்படும். இந்த சேவையை பயன்படுத்த www.direct2door.lk அல்லது 0117 556600 எனும் இலக்கத்தினூடாக தொடர்பை ஏற்படுத்த முடியும்.

மேலும், 0779884631 எனும் இலக்கத்துடன் Whatsapp தொடர்பாடல்கள் ஊடாகவும் பயன்பெற முடியும். Direct2Door என்பது மேலும் வாடிக்கையாளர் சௌகரியத்தை வழங்கும் வகையில் கடன் அட்டை கொடுப்பனவுகளை ஏற்றுக்கொள்ளவும் முன்வந்துள்ளது.

Direct2Door சேவை பிரஷாந்த் பிரேமகுமார் மற்றும் தீபதர்ஷன் கந்தையா ஆகியோரால் இணைந்து நிறுவப்பட்டுள்ளதுடன் உள்நாட்டு பலசரக்கு விற்பனையாளர்கள் மற்றும் பயிற்றுவிக்கப்பட்ட சுயாதீன ஒப்பந்தக்காரர்கள் ஆகியோருடன் பங்காண்மைகளை பேணுவதில் தங்கியுள்ளது. இந்த தரப்பினர் உயர் தரம் வாய்ந்த பலசரக்கு பொருட்களை தெரிவு செய்து, அவற்றை விநியோகிக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றனர். குறிப்பாக கொழும்பில் Direct2Door இனால் இரு மணி நேரத்தினுள் இலவச விநியோகம் மேற்கொள்ளப்படுவதுடன் ஏனைய பகுதிகளுக்கு குறிப்பிடத்தக்களவு கட்டணம் சகாய முறையில் அறவிடப்படும்.

இது சாதாரணமாக களஞ்சியசாலைகளில் பலசரக்குகள் நீண்ட காலத்துக்கு சேகரித்து வைக்கப்பட்டு வர்த்தக நாமம் பொறிக்கப்பட்ட வாகனங்களில் விநியோகங்கள் மேற்கொள்ளப்படுவதுடன் அளவுக்கதிகமான விநியோக கட்டணங்கள் அறவிடப்படுவதை போன்ற செயற்பாடுகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக அமைந்துள்ளது.

கடைகளுக்கு நேரடியாக விஜயம் செய்து பொருட்களை ஒவ்வொன்றாக தெரிவு செய்து கொள்வனவு செய்வதை விட ஒன்லைனில் சொப்பிங் மேற்கொள்வது என்பது அதிகளவு வினைத்திறன் வாய்ந்த செயற்பாடாக அமைந்துள்ளது என்பதில் Direct2Door நம்பிக்கை கொண்டுள்ளது. சராசரியாக ஒரு இலங்கையருக்கு வாரமொன்றில் தனது பொருட்களை நேரடியாக கொள்வனவு செய்வதற்கு ஐந்து மணித்தியாலங்கள் தேவைப்படுகிறது என கணிப்பிடப்பட்டிருந்ததுடன் www.Direct2Door.lk எனும் ஒன்லைனில் அல்லது 0117 556600 எனும் ஹொட்லைனில் இரு நிமிடங்களில் தமக்கு தேவையாக பொருட்களை கொள்வனவு செய்து கொள்ளலாம். மேலும்ரூபவ் இது சிறந்த தரத்தை உறுதி செய்வதுடன், தனிநபர் பொருட்களை தெரிவு செய்வதற்கு நிகரான அதே கவனிப்பை இந்த சேவையும் வழங்கும்.

அத்துடன் வாகன தரிப்பிட பிரச்சினை நீண்ட வரிசைகளில் காத்திருந்து கொடுப்பனவுகளை மேற்கொள்வது போன்ற பல பிரச்சினைகளுக்கு தீர்வுகள் காணப்பட்டுள்ளன. இந்த சேவை பெருமளவு நேரத்தை மீதப்படுத்துவது மட்டுமின்றிரூபவ் வாடிக்கையாளர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளது.

பிரஷாந்த் கருத்துத்தெரிவிக்கையில்,

“சிறந்த தக்காளி அல்லது கரட் போன்வற்றை தெரிவு செய்வதில் ஒரு கலை காணப்படுகிறது. Direct2Door சேவையை அறிமுகம் செய்திருந்ததன் மூலமாக நாம் அறிந்து கொண்ட முக்கியமான விடயங்களில் ஒன்றாக இது அமைந்துள்ளது. நாம் தெரிவு செய்யும் பொருட்கள் எப்போதும் உயர் தரத்தில் உள்ளமையை நாம் உறுதி செய்கிறோம். குறிப்பாக பசுமையானவையாக இருப்பதை உறுதி செய்கிறோம்” என்றார்.

சிறந்த மற்றும் கவனமாக தெரிவு செய்யப்பட்ட மரக்கறிகளை வழங்குவதற்கு மேலாக Direct2Door என்பது உயர் பசுமையான கடல் உணவு வகைகள் மற்றும் இறைச்சி வகைகளை விநியோகிப்பதிலும் நன்மதிப்பை பெற்றுள்ளது. வாடிக்கையாளர்களின் தெரிவுக்கமைய வெட்டி தூய்மையாக்கப்பட்டு பொதி செய்யப்பட்டு விநியோகிக்கப்படுகின்றன.

 “ஆரம்பத்திலிருந்து, மக்களின் கொள்வனவு மாதிரிகளை நாம் கண்காணிக்க ஆரம்பித்திருந்தோம் அவர்கள் மரக்கறி மற்றும் பலசரக்கு பொருட்களை எந்த வகையில் கொள்வனவு செய்ய ஆரம்பித்திருந்தனர் என்பது பற்றி கவனம் செலுத்தினோம். அதனைத்தொடர்ந்து நாம் உள்நாட்டு விற்பனையாளர்களுடன் தொடர்பை ஏற்படுத்திரூபவ் பசுமையான மரக்கறிகள் மற்றும் இதர பலசரக்கு பொருட்கள் போன்றவற்றை விநியோகிப்பது பற்றி ஆராய்ந்திருந்தோம். முறையான கலந்துரையாடல்களினூடாக நாம் மேற்கொள்ளும் விற்பனைகளிலிருந்து குறிப்பிட்ட சிறுதொகையை எமது ஆதாயமாக பெற்றுக்கொள்வதற்கு தீர்மானித்தோம். இதன் மூலமாக எமக்கு இலவசமாக கொழும்பினுள் விநியோக நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிகின்றது” என்றார்.

Direct2Door என்பது பெருமளவு மக்கள் மத்தியில் நேருக்கு நேரான கலந்துரையாடல் அடிப்படையிலான சந்தைப்படுத்தல் செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தது குறைந்த செலவில் விநியோகங்களை மேற்கொள்ளககூடிய முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் விநியோக தொடரையும் கொண்டுள்ளது. லங்கன் ஏஞ்சல் நெட்வேர் அமைப்பிடமிருந்து ஆலோசனைகள் மற்றும் நிதி முதலீடுகளையும் நாடியுள்ளது. இதனூடாக எதிர்கால திட்டங்களை முன்னெடுத்துச் செல்ல நீண்ட கால அடிப்படையில் திட்டத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளது.

 “யார் ஓடரை மேற்கொள்வது போன்ற சகல கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பான விவரங்களையும் நாம் பேணி வருகிறோம். இது எமக்கு தரவுகோப்பொன்றை உருவாக்கி எதிர்கால மதிப்பீடுகளுக்கு உதவியாக அமைந்திருக்கும். பொருட்கள் விநியோகத்தர்கள் மற்றும் விற்பனையாளர்கள் ஒரு கால கட்டத்தில் Direct2Door போன்ற மூன்றாம் தரப்பினரை ஈடுபட அனுமதிக்காத நிலை காணப்பட்ட போதிலும்ரூபவ் இதில் காணப்படும் அனுகூலங்களை அவர்கள் தற்போது உணர்ந்துள்ளனர். உதாரணமாக எமது உள்ளக ஆய்வுகளின் மூலமாக சொப்பிங் மேற்கொள்வோர் விற்பனை நிலையமொன்றில் பொருட்களை செலவிடுவதிலும் பார்க்க ஒன்லைனில் இரண்டரை மடங்கு அதிக நேரத்தை செலவிடுவதை அவதானிக்க முடிந்துள்ளது” என்றார்.