அம்பாறை - உகன பகுதியிலுள்ள ஹிமதுருவ வாவியில் நீராடச் சென்ற நபரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று (13) இடம்பெற்றுள்ளது.

நீரில் மூழ்கிய நபரின் சடலத்தை பிரதேச வாசிகள் இணைந்து மீட்டுள்ளனர்.

சம்பவத்தில் உயிரிழந்தவர் அம்பாறை நிந்தவூர் பகுதியைச் சேர்ந்த 37 வயதானவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.